சுவையான சாமை கோழி பிரியாணி செய்வது எப்படி?





சுவையான சாமை கோழி பிரியாணி செய்வது எப்படி?

நம்முடைய பாரம்பரியத்தில் நாட்டுக் கோழிக்கென்று தனி இடம் என்றுமே உண்டு.. மருந்தாகவும், விருந்தாகவும் ஒரு உணவு நமக்கு கைகொடுக்கிற தென்றால், அது இந்த நாட்டுக்கோழி தான். 
சுவையான சாமை கோழி பிரியாணி செய்வது எப்படி?
வெறும் குழம்பு மட்டுமே அல்லாமல், எந்தெந்த மருத்துவ முறைகளில் நாட்டுக்கோழி செய்யலாம்? 

நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை, பிராய்லர் கோழிகள் 45 நாட்களில் வளர்கிற தென்றால் அதன் வளர்ச்சி வித்தியாசம் அதிர வைக்கிறது.. 

நாட்டுக்கோழி உடலுக்கு வலுவும், தசைகளுக்கு உறுதியும், நரம்புகளுக்கு உரத்தையும் தருபவை.. காமத்தைத் தூண்டும் உணவு பட்டியலில் நாட்டுக் கோழிக்கு முக்கிய இடமுண்டு என்கிறார்கள். 

முன்பெல்லாம் வீடுகளில் கோழி அடித்து குழம்பு வைப்பது என்று தான் சொல்வார்கள். அதற்கு காரணம் இந்த நாட்டுக்கோழிகள் தான். 
உறவினர்களை விருந்தோம்பலுக்கும் சரி, நொந்து போன உடல்நலிவுக்கும் சரி, நாட்டுக்கோழி மட்டுமே விருந்தும், மருந்துமாக திகழ்ந்திருக்கிறது.

தேவையான பொருட்கள்

நாட்டு கோழி - 500 கிராம்

மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

புதினா - ஒரு கைப்பிடி

காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

சாமை அரிசி - 500 கிராம்

பிரியாணி இலை - 2

பட்டை - 3

கிராம்பு - 6

ஏலக்காய் - 5

அன்னாசி பூ - 2

வெங்காயம் - 2

இஞ்சி - 50 கிராம்

பூண்டு - 50 கிராம்

தக்காளி - 2

தயிர் - 2 கப்

தேங்காய் பால் - ¼ கப்

செய்முறை 

சுவையான சாமை கோழி பிரியாணி செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நாட்டு கோழி அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் 1 ½ தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதனுடன் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ போட்டு வதக்கவும்.

இதனுடன் நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க பின்னர், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போன பின் புதினா மற்றும் கொத்துமல்லியைச் சேர்க்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள், தயிர் காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றுடன், தயாரித்து வைத்துள்ள சிக்கன் கலவையைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
கால் கப் தேங்காய் பால் மற்றும் தேவையான தண்ணீர், சாமை அரிசி சிறிதளவு நெய் மற்றும் புதினா, கொத்து மல்லியைச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். கமகமக்கு சாமை கோழி பிரியாணி ரெடி!
Tags: