அயிலை மீன் குழம்பு செய்வது எப்படி?





அயிலை மீன் குழம்பு செய்வது எப்படி?

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்து வெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா... இந்தப் பாட்டை ரசிக்காத மீன் ரசிகர்கள் குறைவு. 
அயிலை மீன் குழம்பு செய்வது எப்படி?
சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும் போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கி விடும். 

அந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது மீனின் ருசி. 

இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள் கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவை தான்.

ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக் கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால் போதும்... 

மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தே போய் விடுவார்கள். மீனுக்கும் அதன் காதலர்களுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.

சரி இனி அயிலை மீன் கொண்டு சுவையான அயிலை மீன் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

அயில மீன் ‍ கால் கிலோ

அரைக்க‌

முழு காஞ்ச மிளகாய் ( சிவப்பு மிளகாய்) ‍ 3 முழு மிளகு ‍ 1 தேகக்ரண்டி 

சீரகம் ‍ ஒரு தேக்கரண்டி

சோம்பு ‍ ஒரு தேகக்ரண்டி

ஆச்சி அல்லது சக்தி குழம்பு பொடி ‍ ஒரு தேக்கரண்டி

தேஙகாய் ‍ ஒரு சிறிய கப் ( ஒரு முடி தேஙகாயில் முன்றி ஒரு பங்கு)

தாளிக்க

எண்ணை

சீரகம்

கருவேப்பிலை

புளி ‍ ஒரு லெமன் சைஸ்

செய்முறை

அயிலை மீன் குழம்பு செய்வது எப்படி?
புளியை ஒரு டம்ளர் வெண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்து கொள்ளவும். மிக்சியில் மிளகு, சீரகம், சோம்பு, காஞ்ச மிளகாய், சேர்த்து திரித்து கொண்டு 

அத்துடன் குழம்பு பொடி தேங்காய் சேர்த்து நன்கு மையாக அரைகக்வும். மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

சட்டியை அடிப்பில் ஏற்றி எண்ணை ஊற்றி காய வைத்து எண்ணை சீரகம், கருவேப்பிலை போட்டு

தாளித்து அரைத்த விழுதை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.

புளி கரைத்ததை ஊற்றி, தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு மசாலா வாடை போகும் வரை கொதிக்க விட்டு கடைசியாக மீனை போட்டு வேக விட்டு இரக்கவும்.

கவனிக்க:
தண்ணீர் எல்லாம் சேர்த்து 4 டம்ளர் இருக்கும்படி ஊற்றினால் கொதித்து முக்கால் டம்ளர் அளவு வற்றும். 

இது 4 நபருக்கு போதுமானது. இதில் வெங்காயம் தக்காளி சேர்க்க வில்லை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதாக இருந்தால் முள்ளில்லாத மீனில் செய்து கொடுக்கவும்.

இது சிறிது காரசாரமாக இருக்கும். காரம் அதிகம் என்றால் தேங்காய் அரை மூடி சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

குழம்பு பொடி ஆச்சி அல்லது சக்தி குழம்பு பொடி சேர்த்து செய்யவும். அதுவும் இல்லை என்றால் தனியாத் தூள் மட்டும் சேர்த்துக கொள்ளலாம்.
Tags: