இஞ்சி, பூண்டு இல்லாத பாசுமதி அரிசி பிரியாணி செய்வது எப்படி?

இஞ்சி, பூண்டு இல்லாத பாசுமதி அரிசி பிரியாணி செய்வது எப்படி?

பாசுமதி என்றாலே அது பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசி வகை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். வழக்கமாக இருக்கும் அரசி வகையை விட நீளமாக இருக்கும் இந்த பாசுமதி அரிசியை ஆயுர்வேதமும் பரிந்துரை செய்கிறது. 
இஞ்சி, பூண்டு இல்லாத பாசுமதி அரிசி பிரியாணி செய்வது எப்படி?
பாசுமதி அரிசி மற்ற அரிசிகளை விட லேசானதாக இருக்கும். ஸ்டார்ச்சின் அளவும் இதில் குறைவு என்பதால் மிக எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது.

அதனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் பத்தியத்தில் இருக்கும்போதும் கூட பாசுமதி அரிசியை எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறது. 

இந்த பாசுமதி அரிசியை எடுத்துக் கொள்ளும் போது உடலில் ஜீரண ஆற்றல் மேம்பட்டு. எளிதில் உடல் கழிவுகள் வெளியேற்றப்படும். பாசுமதி அரிசியில் உள்ள சில நுண் ஊட்டச்சத்துக்கள் நரம்பு மண்டலத்தின் இயக்கதை சீராக்க உதவி செய்கிறது. 

அதோடு நரம்பு செல்களில் உள்ள நச்சுக்களை நீக்க பாசுமதி உதவி செய்வதாகக் கூறப்படுகிறது.அரிசி அதிகம் ஊறினாலும் உங்க பிரியாணி குழைந்து போகும். 

நினைவில் வைத்து பிரியாணி செய்ய ஆரம்பிக்கும் போது ஊற வைங்க போதும். 

பிரியாணியில் வெங்காயம் அரைத்து சேர்ப்பதுக்கும், நறுக்கி சேர்ப்பதுக்கும் சுவை மனம் வேறுபடும். சின்ன வெங்காயம் அரைத்து சேர்த்தால் அது வேறு விதமான சுவையையும் மனத்தையும் தரும்.
கொத்தமல்லி புதினா எல்லாம் ரொம்ப அரைக்காம, பொடியா நறுக்கி போடுறது வாசம் நல்லா இருக்க உதவும். 

தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்,

தக்காளி - 5,

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 1,

உப்பு - தேவையான அளவு,

எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்.
சுவைக்க, அசத்தலான மலபார் மீன் குழம்பு செய்வது எப்படி?
தாளிக்க:

நெய் - 3 டேபிள் ஸ்பூன்,

சீரகம் - அரை டீஸ்பூன்,

பட்டை - ஒரு துண்டு.
இஞ்சி, பூண்டு இல்லாத பிரியாணி
செய்முறை:

பாசுமதி அரிசியை 3 கப் தண்ணீரில், அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள பாகற்காய் புளி குழம்பு செய்வது எப்படி?

குக்கரில் நெய்யைக் காய வைத்து, பட்டை, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேருங்கள். 

நறுக்கிய தக்காளியை யும் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி,

எலுமிச்சம்பழச் சாறு ஆகிய வற்றைச் சேர்த்து, அரிசியைத் தண்ணீருடன் சேருங்கள். 

தேவையான உப்பு போட்டுக் கலந்து கொள்ளுங்கள். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.
குளூட்டன் இல்லாத சோளம் தினை பரோட்டா செய்வது எப்படி?

விருப்பம் உள்ளவர்கள், தக்காளி வதக்கும் போது, ஒரு கை பட்டாணியை யும் சேர்த்துக் கொள்ளலாம். கலர்ஃபுல்லாக இருக்கும்.
Tags: