பூண்டு கத்திரிக்காய் புளிக்குழம்பு செய்முறை / vanish Garlic Eggplant Sour Recipe !





பூண்டு கத்திரிக்காய் புளிக்குழம்பு செய்முறை / vanish Garlic Eggplant Sour Recipe !

ஆச்சி வத்தக்குழம்பு மசாலா உபயோகித்து இந்தக் குழம்பை செய்தேன். சுவை நன்றாக இருந்தது. 
பூண்டு கத்திரிக்காய் புளிக்குழம்பு
இல்லை யென்றால் வீட்டில் தயாரித்த வத்தக்குழம்பு பொடியை இதற்கு உபயோகிக்க லாம்.

தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 4

பூண்டு பற்கள் - 20 முதல் 25 வரை

சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை

புளி - எலுமிச்சம் பழ அளவு

வத்தக்குழம்பு பொடி - 2 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

நல்லெண்ணை - 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் வரை

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்து மல்லி - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு

செய்முறை:

பூண்டு, வெங்காய த்தை தோலுரித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

பூண்டு கத்திரிக்காய் புளிக்குழம்பு

புளியை ஊற வைத்து, கரைத்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும். தேவையான தண்ணீரைச் சேர்த்து இரண்டரைக் கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

அதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வத்தக்குழம்பு பொடி ஆகிய வற்றைச் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். 

கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பூண்டு, வெங்காயம் (முழுதாக சேர்க்கவும்),

கறிவேப்பிலை, கொத்து மல்லி ஆகிய வற்றைச் சேர்த்து 2/3 நிமிடங்கள் வதக்கவும். 

பின்னர் அதில் கத்திரிக்காய் துண்டு களைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.

தேவைப்பட்டால் மேலும் சிறிது நீரைச் சேர்த்துக் கிளறி விடவும். மூடி போட்டு, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

காய் வெந்து, எண்ணை பிரிய ஆரம்பித்ததும், இறக்கி வைக்கவும்.
Tags: