மாங்காய், முருங்கைக் காய், பலாகொட்டை சாம்பார் தஞ்சை மாவட்ட த்தில் பிரசித்த மான ஒன்று. கோடைகாலத்தில், இந்த மூன்று காய்களும் தாராள மாக கிடைப்ப தால்,

பலாகொட்டை
அனேக மாக எல்லோர் வீட்டிலும் வாரம் ஒரு முறை யாவது இந்த சாம்பார் கண்டிப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1 (நடுத்தர அளவு)

முருங்கைக் காய் - 1

பலாக்கொட்டை - 5 முதல் 6 வரை

தக்காளி - 1

துவரம் பருப்பு - 1 கப்

புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு

சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு

தாளிப்பதற்கு:

எண்ணை - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 (நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்)

பச்சை மிளகாய் - 2 (நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்)

செய்முறை: 

துவரம் பருப்பை கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைப் போட்டு, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுக்கவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 

தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பலாகொட் டையை குறுக்கே இரண்டாக வெட்டி,

அதன் மேலுள்ள வெள்ளைத் தோலை நீக்கி, 2 கப் நீரில் போட்டு வேக விட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

பலாகொட்டை சாம்பார்

முருங்கைக் காயை 2 அல்லது 3 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

மாங்காயை கொட்டை யுடன் நான்கு அல்லது 5 துண்டு களாக விட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்தி ரத்தில் முருங்கைக் காய் துண்டுகள், வேக வைத்த பலாகொட்டை, தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகிய வற்றைப் போட்டு, காய் மூழ்கும் 

அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து 5 அல்லது 6 நிமிடங்கள் வேக விடவும்.

பின்னை அதில் மாங்காய் துண்டு களை சேர்த்து மாங்காய் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
மாங்காய் சீக்கிரம் வெந்து விடுமாகை யால், முருங்கைக் காய் சற்று வெந்ததும் தான் மாங்காயைச் சேர்க்க வேண்டும்.

மாங்காயை முதலிலேயே சேர்த்தால், மாங்காய் வெந்து கரைந்து விடும். 

காய்கள் வெந்த வுடன், புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் வெந்தப் பருப்பை கடைந்து சேர்க்கவும்.

ஒரு வாணலி யில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு, அது வெடிக்க ஆரம்பித் ததும், பெருங்காயத் தூள்,

வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப் பிலைச் சேர்த்து வதக்கி, கொதிக்கும் சாம்பாரில் கொட்டி, இறக்கி வைக்கவும்.