பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள பாகற்காய் புளி குழம்பு செய்வது எப்படி?





பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள பாகற்காய் புளி குழம்பு செய்வது எப்படி?

பாகற்காயில் உள்ள கசப்புத் தன்மையினாலேயே அதை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.
பாகற்காய் புளி குழம்பு செய்வது எப்படி?
பாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின் (Betta Carotene) மற்றும்  வைட்டமின் A கண் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தரும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி - ஆக்ஸிடென்டுகள் கண்களைப் பாதுகாக்க உதவுகிறது. 
இத்தகைய பண்புகளை கொண்ட பாகற்காயில் பாகற்காய் புளி குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானப்பொருட்கள்:

சிறு பாவக்காய் - 1 கப்

சாம்பார் வெங்காயம் - 15 முதல் 20 வரை

பூண்டு பற்கள் - 10 முதல் 15 வரை

தக்காளி - 1

புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு

சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன் (குவித்து எடுக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
குற்றவாளியிடம் குழந்தையை கொடுத்த பெண், பிரீஸரில் அடைத்த காதலன் !
தாளிக்க:

நல்லெண்ணை - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு
முதுமையில் தனிமை ஏன் வருகிறது ?
செய்முறை:

பாகற்காய் புளி குழம்பு
பாவக்காயின் இரு முனை களையும் கிள்ளி விட்டு, கொதிக்கும் நீரில் போட்டு, சில நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
NSG என்றால் என்ன? பிரதமர் வெளிநாடு செல்ல இதுவும் ஒரு காரணம் !
(கொதிக்கும் நீரில் சிறிது வெல்லத்தைச் சேர்த்தால், பாவக்காயின் கசப்பு சற்று குறையும்)

புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

தேவை யான அளவு தண்ணீரைச் சேர்த்து 2 கப் அளவிற்கு புளித்தண் ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாம்பு போல வளர்ந்த கற்றாழை.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள் !
பூண்டு, வெங்காயம் ஆகிய வற்றை உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். 

கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப் பருப்பு, வெந்தயம், பெருங்காயத் தூள் ஆகிய வற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.

பின்னர் தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும். 

பின்னர் அதில் பாவக்காய், புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து சற்று கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.
இநதக் குழம்பிற்கு "சிறு பாவக்காய்" (மிதி பாவக்காய் என்றும் சொல்வார்கள்) நன்றாக இருக்கும்.

இல்லை யென்றால் சாதரண நீட்ட பாவக்காயையும் உபயோகிக்க லாம்.
Tags: