தேவையான பொருட்கள் :

மட்டன் – 1 கிலோ,

பாஸ்மதி அரிசி -1 கிலோ,

இஞ்சி – சிறிய துண்டு,

முழு பூண்டு – 2,

கறிவேப்பிலை – 2 கொத்து,

நறுக்கிய புதினா இலை – 1 கப்,

பச்சை மிளகாய் – 10,

லவங்கம் – 4,

பட்டை – 2 துண்டு,

பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்,

ஜாதிக்காய் – லு டீஸ்பூன்,

பால் – 8 டீஸ்பூன்,

குங்குமப்பூ – 1 டீஸ்பூன்,

நறுக்கிய வெங்காயம் – 3(பெரியது)

எலுமிச்சை சாறு – 1 பழத்தின் சாறு,

மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்,

தயிர் – 200 கிராம்,

வேக வைத்த முட்டைகள் – 3,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

அரிசியையும் மட்டனையும் நன்கு கழுவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, புதினா, பச்சை மிளகாய் நான்கையும்

நன்கு அரைத்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும். 

ஹைதராபாத் பிரியாணி
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி பிறகு அதோடு லவங்கம், பட்டை, பெரு ஞ்சீரகம், ஜாதிக்காய், நன்கு வதக்கி

சுத்தம் செய்த மட்டன், உப்பு அரைத்து வைத்த விழுது, தயிர், மிளகாய்ப் பொடி எல்லாவற் றையும் வதக்கி நன்கு அரை மணி நேரம் வேக விடவும்.

பிறகு தனியே ஒரு வாண லியில் நெய்யை சூடாக்கி, வெந்த மட்டன் கலவை யை அதோடு சேர்த்து 40 முதல் 45 நிமிடம் வரை மிகவும் குறைவான தீயில் வேக விடவும்.

வெந்து கொண்டிருக்கும் இந்தக் கறிக்கலவையை அவ்வப்போது கிளறி விடவும்.

இந்த கிரேவி, திக்காக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவு ம். குக்கரில் சாதத்தை சற்று உதிர் உதிராக வடிக்கவும். 

இந்த சாத த்தை ஒரு வாயகன்ற பேக்கிங் பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் முதலில் பாதி அளவிற்கு சாதத்தைப் போட்டு

அதன் மேல் மட்டன் கிரேவியை சீராக ஊற்றி, மீண்டும் சாதத்தைப் போடவும். பிறகு மீண்டும் கிரேவி போடவும். 

பாலில் ஊற வைத் த குங்குமப் பூவையும் இதில் போட்டு சரியான மூடியில் இறுக் கமாக மூடி விடவும்.

இதை மைக்ரோவேவ் அவனில் 1800நீக்கு 15 நிமிடம் வைத்து பேக் செய்தால் பிரியாணி ரெடி!