சுவையான ஜாப்பனீஸ் சீஸ் கேக் செய்வது எப்படி?





சுவையான ஜாப்பனீஸ் சீஸ் கேக் செய்வது எப்படி?

பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், நீண்ட காலமாக அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் சீஸ் ஆரோக்கியமற்றது என்று பலராலும் நம்பப்படுகிறது. 
சுவையான ஜாப்பனீஸ் சீஸ் கேக் செய்வது எப்படி?
நிறைவுற்ற கொழுப்புக்கும் இதய நோய்க்கும் தொடர்புள்ளதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், சீஸில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. 

உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள். 

முக்கியமாக இந்த ஜாப்பனீஸ் சீஸ் கேக்கை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், உங்கள் குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். 

அந்த அளவில் ருசியாக இருக்கும். ஜாப்பனீஸ் சீஸ் கேக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள். 

தேவையான பொருள்கள் :
க்ரீம் சீஸ் - அரை கிலோ

முட்டை - 5

சீனி - 3 கப்

பால் - ஒரு கப்

மைதா மாவு - ஒரு கப்

புளிப்பில்லாத கெட்டித் தயிர் - ஒரு கப்

வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

கேக் பாத்திரத்தில் பூசுவதற்கு:

பட்டர்

மைதா மாவு - 2 தேக்கரண்டி

கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் செய்வதற்குரிய அறிகுறி !

செய்முறை :

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஓவனை முற்சூடு செய்து கொள்ளவும். 

க்ரீம் சீஸுடன் சீனியைச் சேர்த்து எலக்ட்ரானிக் ப்ளெண்டரால் 5 நிமிடங்கள் அடித்துக் கொள்ளவும். அதனுடன் பால் சேர்த்து அடிக்கவும். நன்கு க்ரீம் பதம் வந்ததும் முட்டை களை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்.

பிறகு தயிரைச் சேர்த்து ஸ்லோ மோடில் வைத்து அடித்து, எசன்ஸ் சேர்த்து அடிக்கவும். அத்துடன் மைதா மாவை சலித்துச் சேர்க்கவும். இந்தக் கலவையை ஸ்பேட்சுலாவால் கட்டிக ளில்லாமல் நன்கு கலந்து வைக்கவும்.

கேக் பாத்திரத்தில் பட்டர் பூசி, மைதா மாவை பரவலாகத் தூவி கேக் கலவையை ஊற்றவும்.

சத்து மாவு பாசி பருப்பு அடை ரெசிபி !

பிறகு மைக்ரோவேவ் தட்டில் ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். கேக் பாத்திரத்தை வைத்து 180 டிகிரியில் ஒரு மணி நேரம் பேக் செய்து எடுக்கவும்.
ஒரு டூத் பிக் கொண்டு கேக் வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு, வேக வில்லை யெனில் மேலும் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கலாம்.

டேஸ்டி ஜாப்பனீஸ் சீஸ் கேக் ரெடி.
Tags: