ஆத்தூர் மிளகு கறி செய்முறை !





ஆத்தூர் மிளகு கறி செய்முறை !

தேவையான பொருள்கள் :

மட்டன் - அரைக் கிலோ

வெங்காயம் - ஒன்று

தக்காளி - இரண்டு

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

தயிர் - ஒரு மேசைக்கரண்டி

அரைக்க:

மிளகு - 1 1/2 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - இரண்டு

முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி

பட்டை - ஒரு அங்குல துண்டு

கிராம்பு - மூன்று

ஏலக்காய் - ஒன்று

தேங்காய் - ஒரு பத்தை

முந்திரி - ஐந்து

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டு - ஐந்து பற்கள்

தாளிக்க:

எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - ஐந்து

இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10 இதழ்

கொத்தமல்லி தழை - சிறிது (கடைசியில் மேலே தூவ)

செய்முறை :

கறியை சுத்தம் செய்து ஜவ்வெடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். மற்ற தேவையா னவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆத்தூர் மிளகு கறி
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கறியை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு தக்காளியை கையால் பிசைந்து விட்டு சேர்க்கவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, தனியா, சோம்பு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்து கறியுடன் சேர்க்கவும்.

அரைத்த மசாலாவை நன்கு கறியுடன் சேர்த்து கலக்கி பத்து நிமிடம் ஊற வைக்கவும். அதில் ஒரு மேசைக்கரண்டி தயிரும் சேர்த்து கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் ஊற வைத்திருக்கும் கறியை சேர்த்து பிரட்டி விடவும்.

ஐந்து நிமிடம் தீயை மிதமாக வைத்து குக்கரை மூடி போட்டு நான்கு அல்லது ஐந்து விசில் விட்டு இறக்கவும்.

இறக்கியதும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான ஆத்தூர் மிளகு கறி ரெடி.
Tags: