புரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை குழம்பு செய்முறை !





புரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை குழம்பு செய்முறை !

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. 
கொண்டைக்கடலை குழம்பு
அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. 

தேவையான பொருள்:

கொண்டைக்கடலை,

துருவிய தேங்காய்,

வெங்காயம்,

தக்காளி,

மிளகு,

சீரகம்,

மல்லி,

எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறி வேப்பிலை தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொண்டைக்கடலையை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
கொண்டைக்கடலை
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் துருவிய தேங்காயை லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிளகு, சீரகம், மல்லி போன்ற வற்றையும் தனித் தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் பின் வறுத்தப் பொருட்களை குளிர வைத்து விட்டு, மிக்ஸியில் அவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறி வேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கி விட்டு, வேக வைத்துள்ள கொண்டைக் கடலையைப் போட்டு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து,

நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, இறுதியில் கரம் மசாலாவைத் தூவி கிளறி, இறக்கி விட்டால் கொண்டைக் கடலை குழம்பு ரெடி.
Tags: