சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் செய்வது எப்படி?





சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் செய்வது எப்படி?

விளையாட்டு  வீரர்களின் டயட்டில் கட்டாயம் டார்க் சாக்லெட் இடம் பெற்றிருக்கும்.டார்க் சாக்லெட்கள் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது. 
சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் இளைய தலைமுறையினர் வரை அவர்களது ஞாபகத்திறன் அதிகரிக்கும். உங்கள் சருமம் நீர்ச்சத்தை இழந்து வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. முகப்பருக்களையும் தடுக்கிறது. 

தந்தையர் தினம் நெருங்கிக் கொண்டி ருக்கிறது. இந்த தந்தையர் தினத் தன்று உங்கள் தந்தைக்கு ஆச்சரியம் கொடுக்க நினைத்தால், அவருக்கு உங்கள் கையாலேயே கேக் செய்து கொடுங்கள்.

நிறைய பேருக்கு சாக்லெட் ப்ளேவர் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள் எதை வாங்கி சாப்பிட்டாலும், சாக்லெட் ப்ளேவரையே தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள்.

அப்படி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் கேக் செய்வதாக இருந்தால், சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் செய்யுங்கள்.
இது மிகவும் சுவையான கேக் மட்டுமின்றி, எளிமையான செய்முறையையும் கொண்டது.

தேவையான பொருட்கள்: 

டார்க் சாக்லெட் - 2 கப் 

கொக்கோ பவுடர் - 1/2 கப் 

மைதா - 1 1/2 கப் 

ராஸ்பெர்ரி - 2 கப் 

பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன் 

பொடி செய்த சர்க்கரை - 1 கப் 

வெண்ணெய் - 250 கிராம் 

தண்ணீர் - 1 1/2 கப் 
செய்முறை: 
சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் செய்வது எப்படி?
முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும். பின் ஒரு பேனில் வெண்ணெய், தண்ணீர், சர்க்கரை, கொக்கோ பவுடர்

மற்றும் டார்க் சாக்லெட் சேர்த்து, அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்கும் போது, கட்டி சேராத வண்ணம் கிளறி விட்டு, பின் அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

மிகவும் அவசரமாக கேக் செய்ய வேண்டு மானால், இறக்கி வைத்துள்ள பேனை குளிர்ச்சி யான நீரில் வைத்து குளிர வைக்கலாம். 

கலவை யானது நன்கு குளிர்ந்ததும், அதில் பேக்கிங் சோடா, மைதா சேர்த்து நன்கு கிளறி, பின் சிறிது ராஸ்பெர்ரி சேர்த்து பிரட்ட வேண்டும். 

அடுத்து வெண்ணெய் தடவி வைத்துள்ள பேக்கிங் பேனில், மைதா கலவையை ஊற்றி,
அதன் மேல் சிறிது ராஸ்பெர்ரியை தூவி, ஓவனில் வைத்து 80-90 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும். 
பின் அதனை இறக்கி குளிர வைத்து, ஒரு தட்டில் மாற்றிக் கொண்டால், சுவையான சாக்லெட் ராஸ்பெர்ரி கேக் ரெடி!
Tags: