மசாலா சப்பாத்தி செய்முறை !





மசாலா சப்பாத்தி செய்முறை !

சப்பாத்திகளிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மசாலா சப்பாத்தி என்னும் கார சப்பாத்தி. இந்த சப்பாத்தியானது மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்வதாகும். மேலும் சுவையாகவும் இருக்கும். பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம்.
மசாலா சப்பாத்தி
தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - 2 கப் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

தயிர் - 2 டேபிள் ஸ்பூன் 

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 

சாட் மசாலா - 1/2 டீஸ்பூன் 

சீரகம் - 1/2 டீஸ்பூன் 

சர்க்கரை - 1 சிட்டிகை 

உப்பு - தேவையான அளவு 

தண்ணீர் - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் தண்ணீரைத் தவிர அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். 

பின் அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் நன்கு மென்மையாக பிசைந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதனை உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். 

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், மசாலா சப்பாத்தி ரெடி!
Tags: