தீபாவளி ஸ்பெஷல்... ராகி அதிரசம் செய்வது எப்படி?





தீபாவளி ஸ்பெஷல்... ராகி அதிரசம் செய்வது எப்படி?

எப்பவுமே நம்ம ஊர் வழக்கங்கள், நம்ம ஊர் உணவுகள் என்று பெருமைப்பட்டு கொள்வோர் நம்மில் அநேகம் பேர். அந்த வரிசையில் இது எங்க ஊர் பதார்தம்.  
தீபாவளி ஸ்பெஷல்... ராகி அதிரசம் செய்வது எப்படி?
கேழ்வரகு வெல்லம் காம்பினேஷனை இன்று தான் நாம் மெல்ல மெல்ல உணர்ந்து வருகிறோம். வித்தியாசமான, சத்தான இந்த பலகாரத்தை செய்து பாருங்களேன். 
தேவையான பொருட்கள் :

ராகி மாவு – 500 கிராம் 

வெல்லம் – 250 கிராம் 

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் பொடி – சிறிதளவு 

எண்ணெய் – பொரித்தெடுக்க

செய்முறை :
ராகி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகிய வற்றை கலந்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாகு செய்து அதில் ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். 
அதை ஒரு நாள் ஊற விட்டு, மறுநாள் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதிரசமாக சுட்டு எடுக்கவும். மிருதுவான, சுவையான அதிரசம் தயார்.
Tags: