திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி? திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி? - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?

இந்த இருட்டுக்கடை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் எதிர் புறம் உள்ளது. 
திருநெல்வேலி அல்வா
திருநெல்வேலிக்கு வரும் பலருக்கு இந்த கடை அல்வா கிடைப்பது இல்லை. 

இதனால் இதற்க்கு அடுத்த இடத்தில் உள்ள சாந்தி ஸ்வீட் அல்வா இங்கு மிக பிரபலம்.

ஆனால் சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச் செய்யப்படும் அல்வா மிகச் சுவையாக நெல்லையின் பல இடங்களில் கிடைக்கிறது.

தேவையான பொருட்கள்:

நெய் - 300 கிராம், 

கோதுமை - 200 கிராம், 

சீனி - 600 கிராம் 

நெய் - தேவையான அளவு 

நெய்யில் வருத்த முந்திரி - தேவையான அளவு

செய்முறை: 

இருட்டுக்கடை அல்வாவின் ருசி அவர்கள் அனைத்தும் கையிலே செய்வது தான், அந்த ருசி வேண்டும் என்றால் நீங்களும் இது போல் செய்யுங்கள்.

கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊற வைக்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு. 

கோதுமை ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். கோதுமையை அரைக்க அரைக்க பாலாக பொங்கும்.

அதை ஒரு வெண்மையான துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும். இது போல் அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம்.

இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும் அந்த நீரை நீக்கி விடுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும்.

பால் கொதித்து வரும் போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது. 

பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும்.

கிளறிக் கொண்டிருக்கும் போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறி வரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். 

நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் ருசி அப்படியே இருக்கும்.