பால் என்றாலே முக்கியமானது தான். அதிலும் அந்த பாலில் செய்யப்படும் அல்வா..? இன்னும் ஸ்பெஷல் தானே.
ஆமாங்க. இந்த பால் அல்வா தரம் வாய்ந்த நல்ல சுத்தமான பாலில் இருந்து தயாரிக்கப் படுகிறது. பால் கோவா எல்லாருக்கும் பிடிக்கும்.
அதிலும், பால் அல்வா.. சொல்லவா வேண்டும்..? ஸ்வீட் டப்பாவ ஓபன் பண்ணா குழந்தைகள் முதல்ல எடுக்குறது இந்த பால் அல்வா தான்.
பால் அல்வா எப்படி செய்யலாம், அதற்கு என்னென்ன தேவை என்று இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1. பால் : 2 கப்
2. சர்க்கரை : 1 கப்
3. நெய் : 1/2 கப்
4. ரவை : 1/4 கப்
5. முந்திரி பருப்பு : 5
6. ஏலக்காய் பவுடர் : 1/4 ஸ்பூன்
செய்முறை :
முதலில் முந்திரி பருப்பை நெய்யில் வதக்கவும். ரவையை பாலில் போட்டு நல்ல கனமான பாத்திரத்தில் கிண்ட வேண்டும்.
இதனுடன் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு மாதிரியான கெட்டிப் பதத்திற்க்கு வரும் பொழுது அடுப்பினை சிம்மில் வைக்க வேண்டும்.
ஏலக்காய் பௌடரை இணைத்து கொள்ள வேண்டும். எல்லாம் முடிந்தவுடன் ஒரு கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பி லிருந்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும்.
தற்போது பால் அல்வா உண்ண தயார் நிலையில் உள்ளது.