ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

என்ன தான் உள்ளது இந்த ஐஸ்கிரீமில் என்றால்… பால் புரதம், பால் கொழுப்பு, சர்க்கரை, தண்ணீர் மற்றுர் ஐஸ் ஆகியவற்றின் கூழ்மம் (emulsion) தான் ஐஸ்கிரீம் என்கிறது அறிவியல். 
ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
நாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதிற்கு மகிழ்ச்சி என அனைத்தையும் கலவையாகத் தரும் ஐஸ்கிரீம்.

சரி இனி ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெனிலா ஐஸ்கிரீம் தேவையான அளவு.

ஜாமூன் செய்ய: 

கோவா - அரை கப்

மைதா - அரை கப்,

சர்க்கரை - அரை கப்

சோடா உப்பு -1 சிட்டிகை

ரீஃபைண்ட் ஆயில் - ஒன்றரை கப்.

செய்முறை:
ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
கோவாவை ஃப்ரிட்ஜில் வைத்து, கெட்டியானதும் எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.அத்துடன் மைதாவைக் கலந்து பிசையவும்.

தண்ணீர் சேர்க்காமல் சோடா உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும். 

சர்க்கரையில் அரை கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். (சர்க்கரை உருகி கொதி வரும் வரை காய்ச்சினால் போதும்). 

பிறகு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து அதில் உருண்டை களை பொன்னிறமாக பொரித்தெடுத்து, ஜீராவில் போடவும். 

குங்குமப் பூவைக் கரைத்து, அதை குலோப் ஜாமூன் + ஜீராவுடன் கலக்கவும்.
பிறகு எசன்ஸையும் கலந்து, குலோப் ஜாமூனுடன் ஒரு கரண்டி ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும். வித்தியாச மான ஜில் ஸ்வீட் & ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம்.
Tags: