ருசியான கோக்கோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாக்லேட்டை ருசிப்பதற்கு விரும்புவார்கள். அதில் இருக்கும் கோகோவை அதிகமாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. 
ருசியான கோக்கோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
ஆனால் இயற்கையான கோகோ தூள் ஆரோக்கியமானது தான். அது தான் சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது என்றாலும் அதனுடன் சர்க்கரை அதிகமாக கலக்கப்பட்டு பதப்படுத்தப் படுகிறது. 

அத்தகைய கோகோவில் கலோரிகளின் அளவும் அதிகமாகி விடும். அதனால் ஆரோக்கியம் ற்றதாக கருதப்படுகிறது. 

பதப்படுத்தப்பட்ட கோகோவை தவிர்த்து விட்டு இயற்கையான கோகோ தூளை உபயோகிக்கலாம். 
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளிய முறையில் வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயார் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: 

பால் - 1 லிட்டர்

கோக்கோ - 4 டீஸ்பூன்

சாக்லேட் எசன்ஸ் - 4 துளி

சர்க்கரை - 1/2 கிலோ

செய்முறை:
ருசியான கோக்கோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிர வைக்கவும். அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோ பவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும்.
10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும். பிறகு ஆற வைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.
Tags:

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !