மணத்தக்காளி வத்தக் குழம்பு செய்முறை !





மணத்தக்காளி வத்தக் குழம்பு செய்முறை !

0
வாரம் ஒருமுறை மணத்தக்காளியை உணவில் சேர்த்து வந்தால், வாய் மற்றும் வயிற்று அல்சர் குணமாகும். 
மணத்தக்காளி வத்தக் குழம்பு
அது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதால், இதனை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அதிலும் மணத்தக்காளி வற்றவை குழம்பு செய்து சாதத்துடன் சாப்பிட்டால், அதன் சுவைக்கு இணை வேறு எதுவும் வராது. 

இங்கு பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் காலையில் எழுந்து சீக்கிரம் செய்யும் வகையில் மிகவும் ஈஸியானது
தேவையான பொருட்கள்: 
மணத்தக்காளி வற்றல் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 4 பற்கள் (தட்டியது)

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் - 1

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

சாம்பார் பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை: 

முதலில் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, 1 1/2 கப் புளிச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் அரிசி மாவை சிறிது நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 

அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயப் பொடி, சீரகப் பொடி, 
வரமிளகாய், பெருங்காயத் தூள், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் மணத்தக் காளி வற்றலை சேர்த்து, 

நன்கு மணம் வரும் வரை வதக்கி, அத்துடன் சாம்பார் பொடி சேர்த்து சிறிது நேரம் கிளறி, 
அடுத்து புளிச்சாறு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு புளியின் பச்சை வாசனை போன பின்னர், அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, 
அடுத்து நீரில் கலந்த அரிசி மாவை சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், மணத்தக்காளி வத்தக் குழம்பு ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)