வெந்தயக் கீரை சப்பாத்தி செய்முறை !





வெந்தயக் கீரை சப்பாத்தி செய்முறை !

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை- ஒரு கட்டு

கோதுமை மாவு- 2 டம்ளர்

பச்சைமிளகாய்- 6

காரப்பொடி- 1 டீஸ்பூன்

கரம்மசாலாப்பொடி- 1 டீஸ்பூன்

சீரகம்- 1 டீஸ்பூன்
ஓமம்- 1/4 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு
வெந்தயக் கீரை சப்பாத்தி
செய்முறை:

1.வெந்தயக் கீரையை மண் போக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.சுடு தண்ணீர் விட்டு கோதுமை மாவையும் வெந்தயக் கீரையையும் சேர்த்துப் பிசைந்து அந்த மாவுடன் உப்பு, சீரகம், பச்சை மிளகாய், கரம் மசாலப் பொடி, காரப்பொடி, ஓமம் ஆகியன வற்றைச் சேர்க்கவும்.

3.அரை மணி நேரம் பிசைந்த மாவைத் தனியே வைக்கவும்.

4.உருண்டை களாக இட்டு வட்டமாகத் தேய்த்து சப்பாத்திக் கல்லில் வெந்தயக் கீரைச் சப்பாத்தியைப் போட்டு எடுக்கவும்.
சப்பாத்தி சிவந்தவுடன் இரு புறமும் மாற்றி மாற்றிப் போட்டு சிவக்க எடுக்கவும். கல்லி லிருந்து இறக்கும் முன் எண்ணெய் அல்லது நெய் தடவிப் பரிமாறவும்.

கூடுதல் தகவல்கள்:

1. வெந்தயக் கீரைச் சப்பாத்திக்குச் சிறந்த இணை பாசிப்பருப்பு தால்.

2. வெந்தயக் கீரைக்குச் சொன்ன முறையில் கீரையையும் கீரைச்சப் பாத்திகளாகச் செய்து பார்க்கலாம்.
Tags: