ஓட்ஸ் தோசை செய்முறை !





ஓட்ஸ் தோசை செய்முறை !

தேவையானவை:

ஓட்ஸ்- 1 டம்ளர்

கோதுமை- 1/2 டம்ளர்

அரிசிமாவு- ஒரு கைப்பிடி

ரவை- ஒரு கைப்பிடி

உப்பு- தேவையான அளவு

தயிர்- 5 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய்- 3

கறிவேப்பிலை- 1 இணுக்கு

காயம் – சிறிதளவு

 ஓட்ஸ் தோசை
செய்முறை:

1. ஓட்ஸைத் திரித்துக் காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும், தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. திரித்த ஓட்ஸ், கோதுமை, ரவை, அரிசிமாவைத் தண்ணீர் விட்டு உப்பு போட்டுத் தோசை மாவு பதத்திற்குக் கரைக்கவும்.

3. தாளிசப்பொருட்களைத் தாளித்து மாவில் கொட்டிப் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

4. அடுப்பை ஏற்றித் தோசைக்கல் சூடானதும் தோசைகளாக வார்க்கவும்.

கூடுதல் தகவல்கள்:

1. சட்னி, குழம்பு, மிளகாய்ப்பொடி ஓட்ஸ் தோசைக்கு அருமையான இணை.

2. சாதா தோசைகளை விட ஓட்ஸ் தோசை சத்தானதும் கூட. 2 தோசைகளிலே வயிறு நிரம்பி விடும்.

3. வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுத்தும் மாவுடன் சேர்த்து வெங்காய ஓட்ஸ் தோசைகளாக வார்க்கலாம்

4. கேரட்டைத் துருவிப் போட்டும் செய்யலாம்.
Tags: