பலாக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?

பலாக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?

பலாக்காய் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதினால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தி ஆகிறது. வலிமையை ஏற்படுத்துகிறது. 
பலாக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?
தாது விருத்தியடைகிறது. இதனைச் சாப்பிடும் சிலருக்கு ருசியை மந்தப்படுத்தும். 

ஆகையினால் இதில் இஞ்சி, மிளகு, மிளகாய், சீரகம் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தியை ஏற்படுத்தும். பலாக்காய் எந்த வியாதியையும் ஏற்படுத்தாது. 
அதே போன்று எந்த வியாதியையும் குணப்படுத்தாது. உண்பதற்குச் சுவையான காயாக இருக்கும். 

சரி இனி பலாக்காய் கொண்டு பலாக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:

பலாக்காய்  - 100 கிராம்

சின்ன வெங்காயம்  -  100 கிராம்

பூண்டு  - 50 கிராம்

கசகசா  - 50  கிராம்

பொட்டுக்கடலை  - 50 கிராம்

இஞ்சி - 10 கிராம்

கிராம்பு  - 2

ஏழக்காய்  - 2

பட்டை  - சிறிது அளவு

தேங்காய் பூ  - சிறிது அளவு

எண்ணெய்  - தேவைக்கு ஏற்ப

உப்பு  - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
பலாக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?
பலாக்காயை தண்ணீரில் நன்கு வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.

மற்ற எல்லா வற்றையும் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிற மாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருப்பது எப்படி?
வதக்கிய அனைத்தை யும் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். 

பிறகு அரைத்த பலாக்காயையும் மற்றும் மேல் சொன்ன அரைத்த கலவையையும் சேர்த்துப் பிசைந்து,

இதனுடன் போதிய அளவு  உப்பு சேர்த்து, நமக்குத் தேவையான அளவு உருண்டை யாக உருட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும். இப்போது பலாக்காய் கோலா உருண்டை தயார்.
உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு செய்வது எப்படி?
இதனுடன் தேங்காய் அல்லது தக்காளிச் சட்னி செய்து உண்டால் இன்னும்  ருசியாக இருக்கும்.
Tags: