சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி?





சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி?

கோழியை மசாலா தடவி துண்டு, துண்டுகளாக வெட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுப்பது தான் சிக்கன் – 65. 

சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி?

இந்த சிக்கன் 65 கண்டு பிடிக்கப்பட்டது 1965-ம் ஆண்டு. இன்றைக்கு 2020 ஆனாலும் சிக்கன் 65 தவிர வேறு எந்தக் கோழிக் கறியும் இப்படிப் பெயர் எடுக்கவில்லை. 

சிக்கன் 65 என்பது கர்நாடக ஸ்டைலில் சமைக்கப்பட்ட உணவு. தேங்காய் அரைத்து, பாரம்பரிய முறையில் சமைக்கப்பட்டது சிக்கன் 65.

சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் 65 செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். 

இதை ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். வாங்க வீட்டிலேயே Chicken 65 செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தயிர் சாதம் சாப்பிட்டு குண்டாகிட்டீங்களா?

தேவையானவை :

எலும்பு நீக்கிய கறி - 250 கிராம் (தேவையான அளவு)

உப்பு - தேவையான அளவு

காஷ்மீரி தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது (Paste) - 2 டீஸ்பூன்

சோள மாவு (Corn Flour) - 2 டீஸ்பூன்

அரிசி மாவு (Rice Flour) - 1 டீஸ்பூன்

லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன்

மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கா? இதோ சூப்பர் மருந்து !

முட்டை  -1

எண்ணெய் - தேவையான அளவு

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 1 டீஸ்பூன்  (நறுக்கியது)

பச்சைமிளகாய் - 2, 3 (கீறியது)

சிவப்பு மிளகாய் - 2

கருவேப்பிலை - 8-10 

Red Chilly Paste - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம் !

செய்முறை :

சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி?

முதலில் எலும்பு நீக்கிய கறியை 250 கிராம் (தேவையான அளவு) எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின் அவற்றில் தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் காஷ்மீரி தூள், 1 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 2 டீஸ்பூன், 

தெரு நாய்களை அரவணைக்கும் மதுரை பெண் - வீதி வீதியாக சென்று உணவு !

இஞ்சி பூண்டு விழுது, 2 டீஸ்பூன் சோள மாவு (Corn Flour), 1 டீஸ்பூன் அரிசி மாவு (Rice Flour), 2 டீஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக Mix செய்யவும்.

பிறகு ஒரு முட்டையை எடுத்து ஒரு பௌலில் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ளவும். 

கறியில் அந்த முட்டையை ஊற்றி நன்றாக Mix செய்யவும். மிக்ஸ் செய்ததை ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக 2-3 நிமிடம் Medium Flame-ல் வைத்து சிக்கனை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

பின் ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். 

சீரகம் பொரிந்தவுடன் 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

கோதுமை ரவை வடை செய்வது

பிறகு அதில் 2-3 கீறிய பச்சை மிளகாய், 2 சிவப்பு மிளகாய், 8-10 கருவேப்பிலை, 1 டேபிள் ஸ்பூன் Red Chilly Paste சேர்த்து வதக்கி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

அதன் பிறகு பொரித்து வைத்த சிக்கனை வெந்து கொண்டிருக்கும் அந்த கிரேவியில் சேர்த்து டாஸ் பண்ண வேண்டும். 

சிக்கன் அந்த கிரேவியில் சேரும் அளவிற்கு நன்றாக Mix செய்ய வேண்டும். ஆனால் அதிகமாக வேக வைக்க வேண்டாம். 

சிக்கன் கிரேவியில் சேர்ந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது அனைவருக்கும் பிடித்த சூடான, மொறு மொறுப்பான சிக்கன் 65 தயார்.

Tags: