சத்தான சுவை மிக்க இலந்தை அடை செய்வது எப்படி?





சத்தான சுவை மிக்க இலந்தை அடை செய்வது எப்படி?

0

எல்லா இடங்களிலும் வளரும் தன்மையுள்ள இலந்தை, மிக்க நற்பலன்களைக் கொண்ட ஒரு தொன்மையான மருத்துவ மரமாகும். இலந்தைப்பழம் அதிக நன்மைகளை கொண்டது. 

சத்தான சுவை மிக்க இலந்தை அடை
இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும்.  வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. 

சிறிய பேரிட்சை மற்றும் ரெட் டேட் என்ற பெயர்களிலும் அழைக்கப் படுகிறது. இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் தாதுக்கள் நிறைந்துள்ளன. 

இலந்தை உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடியது. முதுகு வலி, ஆஸ்துமா, கண் பிரச்சனைகள் அகல, ரத்த அழுத்தத்தை குறைக்க, தலைவலி குணமாக என பல விதங்களிலும் இலந்தை உதவுகிறது. 

உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. இலந்தை பழத்தில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கிறது. உடலில் கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். 

இதனால் லேசாக கீழே விழுந்தாலும் கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும். 

இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உளைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. 

இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்

இலந்தை பழம் - 1 கப்

வெல்லம் - கால் கப்

பச்சை மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - சிறிதளவு

செய்முறை :

முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து கொள்ளவும். பிறகு இலந்தை பழம், பெருங்காயம், உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும். சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் காய விடவும். 

அடுத்த நாள் அற்புதான ருசியில் இலந்தை அடை தயார். கைகளால் உரலில் இடித்து செய்தால் கூடுதல் ருசி கொண்ட பதார்த்தமாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)