செட்டிநாடு பொங்கல் குழம்பு செய்வது எப்படி?





செட்டிநாடு பொங்கல் குழம்பு செய்வது எப்படி?

0

தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும். 

செட்டிநாடு பொங்கல் குழம்பு செய்வது
சங்க காலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். 

சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைந்நீராடல் எனக் குறிப்பிடுகின்றன. 

அப்படிப்பட்ட பொங்கலில் பொங்கல் குழம்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் செட்டிநாடு பொங்கல் குழம்பு என்றால் அனைவருக்கும் எச்சில் ஊரும். அதை எப்படி செய்வது என்று இதில் பார்ப்போம்.

தேவையானவை :

புளி - 1 எலுமிச்சை அளவு

கத்தரிக்காய் - 4

பச்சை மொச்சை - 50 கிராம்

வாழைக்காய் - 1

அவரைக்காய் - 5

சர்க்கரை வள்ளிக்கிழங்கு  - (சிறியது) 1

மஞ்சள் பூசணித் துண்டுகள் - 5

தக்காளி - 1

சின்ன வெங்காயம்  - 20

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

கடுகு  - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி

வெல்லம் (தூள்) - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை :

காய்கறிகள் தயாராக வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, காய்கறிகள் சேர்க்கவும்.

காய்கறிகள் வெந்ததும் சாம்பார் பொடி போடவும். அதன்பின் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். 

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி குழம்புடன் சேர்த்து இறக்குவதற்கு முன் வெல்லத்தூள் போட்டு இறக்கி பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)