எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் செய்வது எப்படி?





எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் செய்வது எப்படி?

0

மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட தோன்றினால், எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். 

எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட்
இதற்கு வீட்டில் பிரட், உருளைக்கிழங்கு இருந்தால் போதும். குறிப்பாக வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அவர்களுக்கு இம்மாதிரியான ஸ்நாக்ஸ் செய்தால், வந்தவர்களை அசத்தும் வகையில் இருக்கும்.

எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் நிறைந்த உணவு !

இப்போது எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் எப்படி செய்வதென்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

எள்ளு விதைகள் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

உப்பு - சுவைக்கேற்ப

உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து தோலுரித்தது)

பிரட் துண்டுகள்

சாட் மசாலா - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் - சிறிது

வெண்ணெய் - டோஸ்ட் செய்வதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்துக் கொண்டு, தோலுரித்து மசித்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளையாக மாறுவதற்கு இதோ சில எளிய வழிகள் !

பின் ஒரு பெரிய பௌலில் மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், சாட் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் 2 டேபிள் ஸ்பூன் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைக்க வேண்டும்.

பின்பு ஒரு தட்டில் எள்ளு விதைகளைப் பரப்பி விட வேண்டும். பின் அதன் மேல் உருளைக்கிழங்கு வைத்த பிரட் பகுதியை எள்ளு விதைகளின் மீது வைத்து ஒருமுறை அழுத்தி விட வேண்டும்.

பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெயைத் தடவி, அதன் மேல் உருளைக்கிழங்கு தடவிய பிரட் பகுதியை சிறிது நேரம் வைத்து, 

எள்ளு விதைகள் பொன்னிறமானதும், பிரட்டை திருப்பிப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்க வேண்டும்.

கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்து நிறைந்த பழங்கள் !

இது போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் டோஸ்ட் செய்து எடுத்தால், எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)