உலகில் அதிக அளவு மக்களால் உணவாக சாப்பிட பயன்படுத்தப்படும் தானியமாக கோதுமை இருக்கிறது.
கோதுமையில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் உள்ளன. இப்படி பல சத்து நிறைந்த கோதுமையில் காக்ரா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒன்றரை கப்,
ரவை – கால் கப்,
சீரகம் அல்லது ஓமம் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
சமையல் சோடா – கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
ரெடிமேட் உணவு ஏற்படுத்தும் பாதிப்புகள் !
செய்முறை:
வெண்ணெய் சேர்த்து, வெது வெதுப்பான நீர் விட்டு கலந்து கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் பிசைந்து சிறு எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக செய்யவும். இதை கைகளால் நன்றாக உருட்டி, வெறும் மாவு தொட்டு எண்ணெய் தடவிய சப்பாத்திக் கல்லில் மெல்லிதாக 6 இஞ்ச் விட்டத்துக்கு பரத்தவும்.
ஆரோக்கியமான பாஸ்ட் ஃபுட் தெரியுமா?
இது எண்ணெய் சேர்க்காத சுட்ட அப்பளங்களைப் போல் இருக்கும். ஆற விட்டு பிளாஸ்டிக் ஜிப்லாக் கவரில் போட்டு வைத்தால், ஒரு வாரம் வரை கெடாது. இதை நெய், ஜாம், சாஸ் தொட்டு சாப்பிடலாம்.