டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் செய்வது எப்படி?





டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் செய்வது எப்படி?

0

ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. 

ஆரஞ்சு ஐஸ்

ஆரஞ்சு பழத்தில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியினை  அதிகரிக்கும். 

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல்  பாதுகாக்க உதவும். 

சரி இனி ஆரஞ்சு பழம் பயன்படுத்தி டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க? எப்போது என்ன சாப்பிடலாம்?

தேவையான பொருள்கள் :

சிறிய ரக ஆரஞ்சு பழம் - 7 அல்லது 8

எலுமிச்சை - 1 (சிறியது)

தண்ணீர் - 1/4 கப்

சீனி - 1/4 கப்

செய்முறை :

டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சை தோல் உரித்து விதை நீக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரும் சீனியும் சேர்த்து கரைந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.

முந்திரியால் செய்யப்படும் காஜூ கத்லி ஸ்வீட் செய்வது எப்படி?

உரித்த ஆரஞ்சுகளை பருப்பு மத்து அல்லது குழிக்கரண்டியின் பின்புறத்தை வைத்து நன்கு அழுத்தி சாறு எடுக்கவும். எடுத்த சாறை ஒரு வடிகட்டி வைத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும்.

ஆரஞ்சு சாறுடன் எலுமிச்சை சாறு, சீனி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

கலந்து வைத்துள்ள ஆரஞ்சு சாறை ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும். 8 மணி நேரம் கழித்து குழாயில் ஓடும் நீரில் மோல்டை காட்டி ஐஸ்களை வெளியே எடுக்கவும்.

சுவையான ஆரஞ்சு ஐஸ் தயார்.

குறிப்பு :

கொழுப்பை இயற்கையாக குறைக்க சாப்பிட வேண்டிய உணவு !

பழங்களை மிக்ஸியில் அடிக்கக் கூடாது. அடித்தால் தோலும், விதையும் சேர்ந்து கசப்பு தன்மையை தரும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)