பார்லியின் அருமையான மருத்துவ நன்மைகள் இதோ… !





பார்லியின் அருமையான மருத்துவ நன்மைகள் இதோ… !

0

மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லி கஞ்சியும் ஒன்று. இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு “வாற்கோதுமை” என்று மற்றொரு பெயரும் உண்டு. 

பார்லியின் அருமையான மருத்துவ நன்மைகள்
ஒர் அவுன்ஸ் அளவுள்ள பார்லி அரிசியில் 3.3 கிராம் அளவு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும், 19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது.

பாஸ்பரசும் இரும்பு சத்தும் தாராளமான அளவிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு காப்பி – டீ போன்ற பானங்களை கொடுப்பதை விட பார்லி கஞ்சியை தொடர்ந்து கொடுக்கலாம்.

பார்லி கஞ்சிபார்லியை வெறும் வானொலியில் வறுத்து அதிலேயே நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் உப்பு சேர்த்து கொஞ்சம் கஞ்சி போல கொதித்து வரும் வரை சமைத்து பின் வடிகட்டி பருகவும்.

பயன்கள்

பார்லியின் அருமையான நன்மை

கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு இந்த கஞ்சி ஒரு சிறந்த மருந்து. இதை அடிக்கடி சாப்பிடுவது மூலம் நரம்புகள் வலுப்படும். 

பார்லி மாவு, கோதுமை மாவு, உப்பு போட்டு தேவையான அளவு சூடான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். 

பின்னர் இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டால் சத்தான பார்லி சப்பாத்தி ரெடி.

இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து சாப்பிட்டால் உடல் பருமனிலிருந்து விடுபடலாம். உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதற்கு இந்த சப்பாத்தி சிறந்த மருந்தாகும்.

பார்லியில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. பார்லியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தை சமப்படுத்த உதவுகிறது.

இதில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். பார்லியில் உள்ள நார்ச்சத்திலிருந்து இரத்த சர்க்கரையை மெதுவாக குறைக்கும்.

பார்லியின் மருத்துவ நன்மைகள்

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். நீரிழிவு நோயாளிகள் பார்லியைப் பயன்படுத்துவதன் மூலம் பயனடையலாம். 

பார்லிக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது மற்றும் கொழுப்பை கட்டுப் படுத்த உதவுகிறது, இதனால் இருதய நோய்களைத் தடுக்கிறது.

பார்லியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, இது இரத்த சோகையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

இதில் சரும மற்றும் முடியை பிரகாசப்படுத்தும் மெக்னீசியம் துத்தநாக தாதுக்கள் உள்ளன. வைட்டமின் சி, பி, இருப்பதால் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)