சுவையான மக்ரோனி செய்வது எப்படி?





சுவையான மக்ரோனி செய்வது எப்படி?

0

நூடுல்ஸ் போன்றது தான் மக்ரோனி. இந்த மக்ரோனியானது பல வடிவங்களில் உள்ளது. இதனை எப்படி செய்வதென்று பலருக்கு தெரியாது. 

சுவையான மக்ரோனி செய்வது
ஆனால் மக்ரோனி செய்வது மிகவும் ஈஸியானது. குறிப்பாக பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்ற ஒரு காலை உணவும் கூட.

இங்கு அந்த மக்ரோனி ரெசிபியின் ஒரு சிம்பிளான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - 2 கப்

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - 3 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான் !

முதலில் ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதித்ததும், அதில் மக்ரோனியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், மக்ரோனி ரெடி!

நிறம் மாறிய உப்பு சோடா ஏரி எனப்படும் பழமையான லோனார் ஏரி !

குறிப்பு:

1 டம்ளர் மக்ரோனிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் விட வேண்டும். அதேப் போல் குக்கரை மூடும் முன், மக்ரோனிக்கு மேல் தண்ணீர் உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)