இரவில் பிரியாணி சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்? - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

இரவில் பிரியாணி சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்?

பிரியாணி என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். 

இரவில் சாப்பிட்டால் என்னாகும்?
பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள். பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. 

இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாது, 

தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள்.

நறுமணமிக்க பாசுமதி அரிசியைத் தனியாக வேக விட்டு இறைச்சி அல்லது காய் கறிகள் தனியாக சமைக்கப்பட்டு இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்றாக பரவிப் பரிமாறுவது பிரியாணித் தயாரிப்பின் தனித்தன்மையாகும். 

உண்பவர் நறுமணமுள்ள சோறு, அடுத்து சுவையூட்டப்பட்ட கறிகள் என மாறி மாறி உண்பதில் இன்பம் பெறுகிறார்.

இரவு நேரத்தில் நமது உடலில் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதால் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இரவு நேரங்களில் எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. இரவு நேரத்தில் ஹெவியான உணவுகளை வயிறு நிறைய சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

இரவு நேரத்தில் உணவுகளை தாமதமாக சாப்பிட்டாலோ அல்லது வயிறு நிறைய சாப்பிட்டாலோ அது மறுநாள் காலையில் பசியின்மைக்கு வழிவகுக்கும். 

இதனால் காலை உணவை தவிர்க்க நேரிடும். காலை உணவை தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியம் கெட ஆரம்பிக்கிறது.

இரவு நேரத்தில் பிரியாணி போன்ற உணவுகளை வயிறு நிறைய சாப்பிடுவதால் அது சரியாக ஜீரணம் ஆகாமல் போய்விடுகிறது. இதனால் கூடுதல் கலோரிகள் கொழுப்பாக தேங்க ஆரம்பிக்கிறது.

தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீர்குலைந்து போய் விடும். பிறகு குடல் அலர்ஜி, இரைப்பை புண், இரப்பை அழற்சி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கி விடும்.

இரவில் பிரியாணி சாப்பிடலாமா?

மாலை 6 மணிக்கு மேல் கலோரி அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் அது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

இரவு நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடுவதால் அது தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் மறுநாள் காலையில் உங்களுக்கு சோர்வை உருவாக்கும்.

எனவே இரவு நேரங்களில் பிரியாணி, பரோட்டா, நூடுல்ஸ், சிக்கன், தந்தூரி, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இட்லி, இடியாப்பம், தோசை போன்ற எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை இரவு நேரங்களில் சாப்பிடுவது நல்லது.