செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?





செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : 

சிக்கன் – 1 கிலோ பாஸ்மதி அரிசி – 5

கப் தண்ணீர் – ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப்

பெரிய வெங்காயம் – 4

தக்காளி – 5

புதினா – அரை கட்டு (அ) ஒரு கப் பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி – அரை கட்டு (அ) ஒரு கப் பொடியாக நறுக்கியது

இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு

பூண்டு – 20 பல்

நெய் – 2

மேஜைக்கரண்டி(விருப்பப்பட்டால்) எண்ணெய் – அரை கப்

மஞ்சள் பொடி – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 12

எழுமிச்சம் பழம் – ஒன்று

தயிர் – ஒரு கப்

உப்பு – 4 தேக்கரண்டி

பொடிக்க: 

பட்டை – ஒரு துண்டு

கிராம்பு – ஆறு

ஏலக்காய் – ஆறு

செய்முறை : 

சிக்கனை தயிர், 1 தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.
செட்டிநாடு சிக்கன் பிரியாணி
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவிவிட்டு இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அரிசியை ஊற வைத்த தண்ணீரை வடித்து விட்டு எடுத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய வுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி, புதினா மற்றும் கொத்துமல்லியை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய வுடன் பொடித்த லவங்கம், பட்டை, ஏலக்காய் பொடி மற்றும் கரம் மசாலாவை போட்டு வதக்கவும்.
பிறகு சிக்கனை போட்டு வதக்கி மூடி போட்டு வைக்கவும். 15 நிமிடம் வரை அடிக்கடி கிளறவும். சிக்கன் பாதி வெந்தவுடன் நாலரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

குழம்பு ஒரு கொதி வந்தவுடன் அரிசியை போட்டு கிளறவும். அரிசி பாதி வெந்தவுடன் அனலை குறைத்து விட்டு எழுமிச்சையை பிழிந்து மூடி வைக்கவும்.

அரிசி வேகும் வரை அடிக்கடி திறந்து பார்த்து மெதுவாக சாதம் உடையாமல் கிளறி விடவும்.

அரிசி வெந்தவுடன் இறக்கி விட்டு புதினா மற்றும் கொத்து மல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Tags: