நரம்பு மற்றும் மூளைக்கு பலம் தரும் சிறந்த உணவுகள் !





நரம்பு மற்றும் மூளைக்கு பலம் தரும் சிறந்த உணவுகள் !

0

அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்து வருகிறோம். அப்படி நாம் மேற்கொள்ளும் விஷயங்களில் சில நன்மையாகவும், சில தீங்கு விளைவிப்பவையாகவும் இருக்கலாம்.

நரம்பு மற்றும் மூளைக்கு பலம் தரும் சிறந்த உணவு
ஆனால் பலருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் என்னவென்று தெரிவதில்லை. அப்படி தெரியாமலேயே அன்றாடம் அவற்றை பின்பற்றி வந்து, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.  
கேமராவில் மட்டும் ஆவிகள் சிக்குவது ஏன்?

மனம் உடல் இரண்டையும் சார்ந்தே ஆரோக்கியம் அமைகிறது. இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும் போது அன் றாட வாழ்க்கையும் சீராகவே செல்லும்.

நமது உடல் மனம் இரண்டின் ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு உணவு பழக்கம் என்றும் சொல்லலாம். உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்தையும் நம்மை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். 

வயாகரா அதற்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம் !

எப்போதும் நம் உடலின் இயக்கத்தை சீராக்கும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைச் சீராக செயல்பட வைக்க வேண்டும்.. மூளையும் தண்டுவடமும் அதில் இருந்து புறப்படும் நரம்புகளும் புத்துணர்வாக சீராக செயல்படுவது அவசியம். 

அந்த வகையில் நம் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் உணவு வகைகளைப் பற்றி பார்க்கலாம். 

பச்சை காய்கறிகள்👈

பச்சை காய்கறிகள்

காய்கறிகள்👈 எப்போதுமே அதிக சத்துகளை கொண்டிருப்பவை.இவற்றில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, ஈ மற்றும் மெக்னீசியம் நிறைந்திருக்கின்றன.

வைட்டமின் பி இதயத் துடிப்பு, சுவாசம் மற்றும் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் ஈ ஆனது நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட துணை புரிகிறது.

மெக்னீசியம் நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது. இந்த 👉சத்துகள் நமது நரம்பு மண்டலத்தின் பணியை சீராக வைப்பதில் முதன்மையானவை என்றும் சொல்லலாம். 

புரோக்கோலி

புரோக்கோலி

புரோக்கோலி👈 அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது என்பதை ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன. இதில் வைட்டமின் சி, இ, கே, ஃபோலேட், சல்ஃபோரஃபேன் போன்ற சத்துகளும் அடங்கியுள்ளன.

இதில் இருக்கும் வைட்டமின் கே மூளைக்கு வலுவூட்டுவதோடு மூளைத்திறனை👈 மேம்படுத்துகிறது. நரம்பியல் சிதைவுகளால் உண்டாகும் அல்சைமர் என்னும் மறதி நோயை தடுக்கிறது.

மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை குறையில்லாமல் சரிச்செய்வதோடு அசிட்டைல் கோலினை👈 பாதுகாத்து வயதான காலத்திலும் நினைவுத்திறனை குறையாமல் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது. 

மீன்

மீன்

அசைவம் சாப்பிடுபவர்கள் உணவில் அதிகம் மீன் சேர்த்து வரலாம். உடல் ஆற்றலாக செயல்பட கொழுப்பு அமிலங்கள் தேவை. அவை மீன் உணவில் நிறைந்திருக்கிறது. 

கொழுப்பு அமிலம் குறைவால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உணவில் மீனை அதிகம் சேர்த்து வரலாம். இந்த கொழுப்பு அமிலங்கள் நரம்பு மண்டலம் எவ்வித பாதிப்புமடையாமல் சீரான பணியை மேற்கொள்ள உதவுகிறது.

அசைவ உணவு தவிர்ப்பவர்கள் மருத்துவரின் அறிவுரையோடு ஒமேகா 3 மாத்திரைகளை எடுத்து கொள்வது நல்லது. 

முட்டை

முட்டை

போஸ்டன் பல்கலைக்கழகம்நடத்திய ஆய்வு ஒன்றில் தினமும் 10 ஆண்டுகளாக முட்டை சாப்பிடும் 1400 பேரின் ஆரோக் கியத்தைக் கண்டறிந்தது. 

இந்த பெரியவர்களின் நினைவுத்திறன் சிறப்பாக இருந்ததும் கண்டறியப்பட்டது. முட்டையில் வைட்டமின் பி மற்றும் கோலின் நிறைந்திருக்கின்றன. 

வயதான பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறையுமா?

இவை மூளை செல்கள் மத்தியில் நினைவுத்திறன் மற் றும் தகவல் தொடர்புக்கு காரணமான அசிடைல்கொலினை சிதையாமல் பாதுகாப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாதாம்

பாதாம்

உலர் பருப்புகளில் ஒன்றான பாதாம்👈 மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி அல்லது 10 பாதாம் கொட்டைகளையாவது எடுத்து கொள்ளுங்கள்.

இதில் சால்மன் மீன்களை போலவே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் மூளையைப் பாதுகாக்கும் 👉வைட்டமின் ஈ-யும் நிறைந்திருக்கின்றன. 

சால்மன்

ஒமேகா 3 உள்ள சால்மன்

மூளை சிறப்பாக இயங்க தேவையான அறிவு ஆற்றலை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தருகின்றன. குறைந்த அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருப்பவர்களின் மூளை மந்தமாக செயல்படுவதாக நியூயார்க் டைம்ஸ் ஜர்னல் நியூராலஜி தெரிவித்துள்ளது. 

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது அதன்படி 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்து ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உட்கொண்டனர். இவர்களது மூளையானது துரிதமாக அதிக ஆற்றலுடன் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டது.

பூசணி விதைகள்

அல்சைமர் நோய் நீங்க பூசணி விதைகள்

இதில் மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாசிய சத்துகள் இருக்கின்றன. அதோடு புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் இ சத்துகளும் இருக்கின்றன.

மூளையின் செயல்பாடு படிப்படியாக குறையும் போது 👉அல்சைமர் என்னும் மறதி நோய் உண்டாகிறது. மூளையில் சுருக்கங்கள். மடிப்புகள். மூளையின் நினைவுத்திறன் படிப்படியாக குறையும்.  

இந்த குறைபாடு நேராமல் இருக்க பூசணி விதை களைத் தவிர்க்காமல் எடுத்து கொள்வது நல்லது. மெக்னீசீயம்👈 இதயம் மற்றும் பக்கவாதத்தை தடுக்கும் ஆற்றலை கொண்டவை. 

மெக்னீசீயத்தின் அளவு குறையும் போது ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, வலிப்பு நோய் போன்ற நரம்பியல் நோய்களை உண்டாக்குகிறது.

டார்க் சாக்லெட்

ஆன்டி ஆக்ஸிடண்ட் மிக்க டார்க் சாக்லெட்

இனிப்பு நிறைந்த சாக்லெட்டுகளை எல்லா வயதினரும் விரும்புவார்கள். சற்றே கசப்பும் மிதமான 👉இனிப்புச்சுவையும் கொண்ட டார்க் சாக்லெட்டுகள் உடலுக்கு நிச்சயம் பலனளிக்க கூடியவை. 

டார்க் சாக்லெட் தொடர்ந்து ஒரு துண்டு வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் மூளை ஆகிய இரண்டயும் பாது காத்து அவற்றின் செயல்களை சீராக்குகிறது. உடலில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது.

டார்க் சாக்லெட்டில் இருக்கும் எபிகேட்டச்சின் என்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மூளை செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் இதிலிருக்கும் ஃப்ளாவனோல்ஸ் நினைவுத்திறனை அதிகரிக்கிறது. 

70 சதவீதம் கோகோ கலந்த பதப்படுத்தப்பட்ட 👉டார்க் சாக்லெட் உங்களை சோர்வுறாமல் பாதுகாக்கிறது. இதனால் இதயம், மூளை இரண்டுமே பாதுகாக்கப்படுகிறது.

நட்ஸ் வகைகள்

ஊட்டச்சத்து மிக்க நட்ஸ் வகைகள்

நட்ஸ் வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. ஒரே நாளில் அதிக அளவு சாப்பிடுவதையும் ஒன்றை மட்டுமே சாப்பிடுவதும் நல்லதல்ல. 

அனைத்து விதமான நட்ஸ்களையும் தினமும் குறிப்பிட்ட அளவு எடுத்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத் துவர்கள். நட்ஸ் வகைகளில் நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஈ போன்ற சத்துகள் உள்ளன. 

அனைத்து வகையான நட்ஸ்களையும் எடுக்கும் போது உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தும் சரிவிகிதமாக கிடைக்கிறது. 

அடிக்கடி தூக்கம் வந்தால்? எச்சரிக்கை !

இதனால் மூளையின் செயல்பாடு பாது காப்பாக அதிகரிக்கிறது. நட்ஸ் வகைகளில் அக்ருட் தவிர்க்கப்பட கூடாதது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந் திருக்கிறது.

ஆய்வு ஒன்றில் தினமும் நட்ஸ் வகைகள் எடுத்து கொண்டால் நினைவுத்திறனை அதிகரித்து நரம்பு கோளாறுகள் வராமல் தடுக்கலாம் என்று தெரிய வந்தது. 

மற்றொரு ஆய்வில் தினமும் நட்ஸ் வகைகள் எடுத்துகொண்ட பெண்களின் மூளைத் திறன் சிறப்பாகவும் அவற்றை எடுக்காத பெண்களின் மூளைத்திறனும் நினைவுத்திறனும் குறைந்திருப்பதையும் கண்டறிந்தது.

அவகேடோ

ஃபோலிக் ஆசிட் நிறைந்த அவகேடோ

ஊட்டசத்துகள் அதிகம் நிறைந்திருக்கும் பழம் இது. வைட்டமின் பி 6 மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்திருக்கிறது. மூளையில் இரத்த உறைவைத் தடுக்க உதவுகிறது. 

வயதான பிறகுபக்கவாத பிரச்சனைகள் வராமல் உங்களை பாதுகாக்கிறது. உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வகையில் செயல்படும் அவகேடோ இதயத்தையும் பாதுகாக்கிறது. 

பெண்களுக்கு உடற்பயிற்சியால் ஏற்படும் தடை !

நரம்பு மண் டலத்தை வலுப்படுத்துகிறது. வேறு பழங்களுடன் ஒப்பிடும் போது அவகேடோவில் அதிக ஊட்டசத்துகள் நிறைந்திருக்கிறது.மூளையும் நரம்பு மண்டலும் சீராக தன் பணியை மேற்கொண்டாலே உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 

ஆரோக்கியமான உடலுக்கு தேவை ஆரோக்கியமாக செயல்படும் மூளையின் ஆற்றல்.மேற்கண்ட இந்த உணவுகள் அனைத்துமே இதை செவ் வனே செய்யும். 

அதனால் உங்கள் உணவு பட்டியலில் இதையும் தவிர்க்காமல் எடுத்தால் நாள்தோறும் சுறுசுறுப்பாக வளைய வருவீர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)