நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்தும் பிஸ்தா பிர்னி செய்வது எப்படி?





நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்தும் பிஸ்தா பிர்னி செய்வது எப்படி?

பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். 
நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்தும் பிஸ்தா பிர்னி
மேலும் இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும். பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதாக அறியப்படுகிறது. 
இந்த பிஸ்தாவில் பிர்னி செய்து சாப்பிட நன்றாக இருக்கும். இது எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்.:

ரவை - ஒரு கப்,

பால் - 3 கப்,

முந்திரி, பிஸ்தா - தலா ஒன்றரை டீஸ்பூன்.

நெய் - 2 டேபிள் ஸ்பூன்,

பிஸ்தா - 30 கிராம்,

சர்க்கரை - ஒன்றரை கப்,

செய்முறை.:

வாணலியை அடுப்பில் வைத்து அதில் ரவையை கொட்டி வறுத்து கொண்டு பின் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 
அது முக்கால் பாகம் வெந்த பின்னர் பால் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு கொதித்த பின்னர் சர்க்கரை, நெய் சேர்த்து 6 முதல் 8 நிமிடங்கள் வைத்திருக்கவும். 
பிஸ்தாவை வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்கு விழுதாக அரைத்து பிர்னியில் சேர்க்கவும். பிர்னி கொதித்த பின்னர் இறக்கி விடவும். முந்திரி, பிஸ்தாவை லேசாக இடித்து பிர்னியில் கலந்து பரிமாறவும்.
Tags: