வரகரிசி மிளகு பொங்கல் செய்வது எப்படி?





வரகரிசி மிளகு பொங்கல் செய்வது எப்படி?

வரகு அரிசி சிறுதானியங்களை போன்று சிறிய விதை பகுதி தான். பொதுவாக அரிசி வகைகளை பாலீஷ் செய்யும் போது அதில் இருக்கும் பி- காம்ப்ளஸ் பெருமளவு வெளியேறி விடும். 
வரகரிசி மிளகு பொங்கல் செய்வது எப்படி?
அதனால் நமக்கு அரிசியில் இருந்து அதிக அளவு மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது. இந்த மாவுச்சத்துதான் டிரைகிளிசரைடு என்னும் கொழுப்பாக உடலில் மாற்றப்படும் போது ரத்த அடர்த்தி இதயத்தை பாதிக்க செய்கிறது. 

வரகு அரிசியில் இந்த மாவுச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் இதை அரிசி உணவுக்கு மாற்றாக எடுத்து கொள்ளலாம். கொழுப்பு அதிகம் இல்லாதது. இதில் இருக்கும் கொழுப்பும் நல்ல கொழுப்பு என்பதால் இதயத்துக்கு நன்மை செய்ய கூடியது.  

உடலுக்கு தேவையான புரதமானது எப்போதும் தானியங்களுடன் பருப்பு வகைகள் சேர்த்து எடுத்து கொள்ளும் போது தான் புரதம் முழுமையாக இருக்கும். 

அந்த புரதம் அமிலத் தன்மையோடு இருக்கும் போது அதில் இருக்கும் நச்சை வெளியேற்ற உடல் வேலைசெய்ய வேண்டும். இதிலிருக்கும் சத்து ரத்தம் உறிஞ்சும் பணியை செய்ய அவை காரத்தன்மையாக மாற்றவும் வேண்டும். 

இந்த பணி உடலுக்கு கூடுதல் சிரமத்தை அளிக்க கூடும்.நாம் சாதரணமாக வெண் பொங்கலில் மிள்கு சீரகத்தினை முழுதாக தாளித்து சேர்ப்போம். 

இந்த ஸ்பெஷல் கோவில் வெண் பொங்கலில் மிள்கு சீரகத்தினை கரகரப்பாக பொடித்து தாளித்து சேர்ப்பார்கள். அரிசிக்கு பதில் இந்த பொங்கலை வரகரிசியில் மற்ற சிறுதானியங்களிலும் செய்யலாம். 
தே.பொருட்கள்.:

வரகரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

நீர் - 3 1/2 கப்

உப்பு- தேவைக்கு

தாளிக்க.:

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 10

மிளகு + சீரகம் - தலா 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை.:
வரகரிசி + பாசிப்பருப்பு இவற்றை கழுவி 3 1/2 கப் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு சேர்த்து குக்கரில் 3-4 விசில் வரை வேக வைக்கவும். 
வெந்ததும் நன்கு மசித்துக் கொள்ள்வும். மிளகு + சீரகத்தினை கரகரப்பாக பொடிக்கவும். பின் நெய்யில் முந்திரி + பொடித்த மிளகு சீரகம் + பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சேர்க்கவும்.
Tags: