தக்காளி கோதுமை தோசை செய்வது எப்படி?





தக்காளி கோதுமை தோசை செய்வது எப்படி?

0
என்னென்ன தேவை?
தக்காளி - 3,

கோதுமை மாவு - 250 கிராம்,

பெரிய வெங்காயம் - 1,

இட்லி மாவு - 100 கிராம்,

கறிவேப்பிலை - சிறிது,

காய்ந்த மிளகாய் - 2,

உப்பு, 

எண்ணெய் - தேவைக்கு, 

சீரகம் - 1 டீஸ்பூன். 
எப்படிச் செய்வது? 
தக்காளி கோதுமை தோசை
தக்காளியை கோதுமை மாவுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். 

இட்லி மாவுடன் அரைத்த தக்காளி கலவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளவும். 
பின்பு நறுக்கிய வெங்காயத்தை கலந்து, சூடான தோசைக்கல்லில் கோதுமை மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறு மொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும். 

குறிப்பு: 

கோதுமை மாவிற்கு பதில் அரிசிமாவை சேர்த்தும் தக்காளி தோசை செய்யலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)