கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா தயாரிப்பது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஆந்திரா ரெசிபிக்கள் மட்டும் தான் காரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், கேரளா ரெசிபிக்களும் மிகவும் காரமாக இருக்கும். 
கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா தயாரிப்பது
அதிலும் மீன், சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், ஆந்திராவை மிஞ்சும் அளவில் காரம் இருக்கும்.
இந்த ரெசிபி விடுமுறை நாட்களில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ஒன்று. சரி, இப்போது அந்த கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலாவின் செய்முறையைப் பார்ப்போம்.. 

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 500 கிராம்

வெங்காயம் – 2 (நறுக்கியது)

சோம்பு – 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா/சிக்கன் மசாலா – 1 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு 

ஊற வைப்பதற்கு…

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா தயாரிப்பது
முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்த பின், அதனை தனியாக வைத்துக் கொள்ளவும். 
பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, சிக்கன் துண்டுகளை போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

பின் அந்த சிக்கனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். 

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும். பின் அதில் மசாலாப்பொடிகள் அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். 

அடுத்து அதில் குக்கரில் உள்ள வேக வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்கவும். 
எண்ணெய் தனியாக பிரியும் போது அதனை இறக்கி பரிமாறினால், கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா ரெடி!!!
கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா தயாரிப்பது எப்படி? கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா தயாரிப்பது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 21, 2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚