தர்பூசணி ரசம் தயார் செய்வது எப்படி?





தர்பூசணி ரசம் தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.: 
தர்பூசணி சாறு – ஒரு கப், 

துவரம் பருப்பை வேக வைத்து மசித்து எடுத்த நீர் – அரை கப், 

புளித் தண்ணீர் – சிறிதளவு, 

முழு நெல்லிக்காய் சாறு – 4 டீஸ்பூன், 

மஞ்சள்தூள், மிளகுத்தூள், ரசப்பொடி, உப்பு – சிறிதளவு.

தாளிக்க.: 

நெய் – ஒரு டீஸ்பூன், 

கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை.: 
தர்பூசணி ரசம் தயார்
வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… பருப்பு நீர், தர்பூசணி சாறு, நெல்லிச்சாறு, புளித் தண்ணீர் சேர்க்கவும். 
இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், ரசப் பொடி சேர்த்து நுரைத்து வரும் போது… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். 

இந்த ரசம், இனிப்பு – புளிப்பு சுவையுடன் அட்டகாசமாக இருக்கும்.
Tags: