சுரைக்காய் அல்வா செய்வது எப்படி?





சுரைக்காய் அல்வா செய்வது எப்படி?

0
சுரைக்காய் என்ன தான் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இதில் உள்ள நச்சுக்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். என்னது சுரைக்காயில் நச்சுத்தன்மையா என அதிர்ச்சி அடைய வேண்டாம். 
சுரைக்காய் அல்வா செய்வது
சுரைக்காயில் உள்ள குக்குர்பிடசின்கள் எனப்படும் நச்சு டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு சேர்மங்களைக் கொண்டுள்ளது. 

இது தாவரணி உன்னி விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சுரைக்காயில் இருந்து சுரக்கப்படும் நச்சாகும்.  

கசப்பான சுவை கொண்ட சுரைக்காய் சாறு உடலில் நச்சு எதிர் வினைகளை ஏற்படுத்துகிறது மற்றும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, இரத்தக்கசிவு, இரத்த சோகை, அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். 

ஒரு வேளை நீங்கள் சுரைக்காய் ஜூஸ் குடிக்கும் போது, அது கசப்பாக இருந்தால் அதனை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

தேவையானவை
சுரைக்காய் - 2 பெரிய காய்

சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்

ரெட் கலர் - 1/4 தேக்கரண்டி

சர்க்கரை - 2 கப்

நெய் - 1/2 கப்

செய்முறை : 

முதலில் சுரைக்காயை தோல் சீவி நடுவில் இருக்கும் விதை பகுதியை நீக்கி விடவும். பின்னர் சுரைக்காயினை காரட் துருவுவது போல துருவி கொள்ளவும். 

சுரைக்காயில் நிறைய தண்ணீர் இருக்கும். அதனால் தண்ணீரை பிழிந்து எடுத்து விடவும். (அல்லது ஒரு துணியில் கட்டி பிழியவும்.) 

ஒரு நாண் ஸ்டிக் கடாயில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி இந்த துருவிய சுரைக்காயை போட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கவும். 

இப்படியே சுமார் 20 -30 நிமிடம் காய் வேகும் வரை 4 -5 நிமிடத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக நெய் சேர்த்து வதக்கவும். 

அதன் பின் கோவாவை சேர்த்து 2 நிமிடம் கிளறவும். பின்னர் சர்க்கரை மற்றும் ரெட் கலர் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். கடைசியில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)