பச்சை பட்டாணி மோதகம் செய்வது எப்படி?





பச்சை பட்டாணி மோதகம் செய்வது எப்படி?

0
வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு  அதிகரிக்கும். 
பச்சை பட்டாணி மோதகம் செய்வது
உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப் பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். 

நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒரு கைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். 

இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. அரை கப் சமைத்த பச்சை பட்டாணியில் 81 கிராம் கலோரியும் 0.4 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. 

இதன் காரணமாக ஆரோக்கியமான எடையை பரமாரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அல்லது உடல் எடைய குறைக்க விரும்புகிறவர்கள் தாராளமாக பட்டணியை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1கப்,

தண்ணீர் - தேவையான அளவு,

ஏலக்காய் - சிறிதளவு,

நெய், உப்பு - சிறிதளவு,

மசித்த பச்சை பட்டாணி - 1½ கப்,

துருவிய வெல்லம் - ½ கப்,

கசகசா, முந்திரி, ஜாதிக்காய் - சிறிதளவு.

செய்முறை:

தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பை போட்டு அதில் அரிசி மாவைப் போட்டு கிளறி மிருதுவான பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும் நெய் சேர்த்துப் பிசைந்து தனியாக மூடி வைக்கவும். 
அதே போல் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்த பட்டாணி, வெல்லம் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய் தூள், கசகசா, முந்திரி இவற்றைப் போட்டுக் கிளறி ஓரளவு கெட்டிப் பதத்தில் இறக்கி வைக்கவும். 

பின்பு மோதக அச்சில் நெய் தடவி அதில் கொழுக்கட்டை மாவைத் தடவி அதனுள்ளே பூரணத்தை நிரப்பி அழுத்தி எடுத்தால் அருமையான மோதகங்கள் தயார். 

இவற்றை இட்லிப் பாத்திரத்திலோ அல்லது ஸ்டீமரிலோ வைத்துப் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். 

வெந்த பிறகு மோதகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)