தோசைக்காய் சாதம் தயார் செய்வது எப்படி?





தோசைக்காய் சாதம் தயார் செய்வது எப்படி?

0
தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 2 கப்,

தோசைக்காய் - 1,

பச்சை மிளகாய் - 6, 

பு ளி - சிறிய எலுமிச்சை அளவு,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

கடுகு - அரை டீஸ்பூன்,

மிளகாய் வற்றல் - 3,

பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

செய்முறை
தோசைக்காய் சாதம் தயார் செய்வது
தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக்காயை வதக்குங்கள். 

பிறகு பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள். 

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகிய வற்றை தாளியுங்கள். சாதத்தில், அரைத்த விழுது, உப்பு, கடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)