மணத்தக்காளி அப்பளக்குழம்பு செய்வது எப்படி?





மணத்தக்காளி அப்பளக்குழம்பு செய்வது எப்படி?

தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 கப்

மணத்தக்காளி வத்தல் - 1 டேபிள் ஸ்பூன்

அப்பளம் - 4

சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
மணத்தக்காளி அப்பளக்குழம்பு செய்வது
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வத்தல் + நொறுக்கிய அப்பளம் + சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் உப்பு + புளிகரைசல் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
Tags: