ருசியான சிக்கன் காலிபிளவர் செய்வது எப்படி?





ருசியான சிக்கன் காலிபிளவர் செய்வது எப்படி?

காலிபிளவர் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. 
ருசியான சிக்கன் காலிபிளவர் செய்வது எப்படி?
நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. 

மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. 
செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும். காலிபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும்.

தேவையான பொருட்கள் :
சிக்கன் – கால்கிலோ

காளிப்ளவர் -சிறியது

வெங்காயம் – 1

தக்காளி -1

பச்சை மிள்காய் – 1

மல்லி இலை – சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கு.
செய்முறை :
ருசியான சிக்கன் காலிபிளவர் செய்வது எப்படி?
சிறிய சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும். வடிகட்டிய சிக்கனுடன், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், தயிர், உப்பு சேர்த்து ஊற வைக்கவும். 

சிறிய துண்டுகளாக காளிப்ளவரை பிரித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி இலை நறுக்கி வைக்ககவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும், நறுக்கிய வெங்காயம் வதக்கவும், 

ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். கரம் மசாலா சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.

மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். பிரட்டி விட்டு ஊறிய சிக்கனை சேர்க்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். மூடி வைக்கவும். சிக்கனில் ஊறும் நீரிலேயே வெந்து விடும். 
பின்பு காளிப்ளவரை சேர்க்கவும். அகப்பை போட்டு கிளர வேண்டாம். பூ உடையாமல் வேகட்டும்.
உப்பு சரி பார்க்கவும். காளிப்ளவர் வெந்தவுடன், மிளகுத்தூள் தூவி, நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான சிக்கன் காளிப்ளவர் ரெடி. இதனை சாதம் சப்பாத்தி, பரோட்டா, நாணுடன் பரிமாறலாம்.
Tags: