அருமையான கேப்பை புட்டு செய்வது எப்படி?





அருமையான கேப்பை புட்டு செய்வது எப்படி?

இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 
கேப்பை புட்டு செய்வது
ஆனால், கூழுக்கு பதிலாக களியாகவோ, ரொட்டியாகவோ சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இதயநோய்கள் வராமல் காக்கும். மைக்ரேன் தலைவலியைப் போக்கும். 

அதோடு மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் பதற்றம், டென்ஷன், மன உளைச்சல், மனச்சோர்வு ஆகியவற்றையும் குறைக்கும். `இன்சோம்னியா’ எனப்படும் தூக்கம் வராத குறைபாட்டை நீக்கும். 

ஹார்மோன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. 

செரிமானத்துக்கு உதவும். பாலூட்டும் தாய்மார்கள் இதைக் குடித்து வந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். கூழாக மட்டுமல்லாமல், கேழ்வரகை தோசை, அடை, கஞ்சி... என விதவிதமாகச் செய்து சாப்பிடலாம். 

தேவையான பொருட்கள் . : 
கேப்பை (கேழ்வரகு) மாவு - ஒரு கப், 

சர்க்கரை - ஓர் உழக்கு, 

நெய் - தேவையான அளவு, 

ஏலக்காய் - 5, 

முந்திரி - 10, 

தேங்காய்த் துருவல் - ஒரு கப்.

செய்முறை . : 

நெய்யில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். கேப்பை மாவைச் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி ஊற வைக்கவும். 

சிறிது நேரம் கழித்து மாவைக் கட்டி யில்லாமல் சலித்து, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்கவும். நன்றாக வெந்த பின் தட்டில் கொட்டி கட்டி யில்லாமல் உதிர்க்கவும். 

பிறகு, சர்க்கரையைக் கலந்து வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
Tags: