மில்க் பவுடர் எக்லெஸ் கேக் ரெசிபி !





மில்க் பவுடர் எக்லெஸ் கேக் ரெசிபி !

பால் பவுடர் மூலமாக குழந்தைக்கு புட்டிப்பால் புகட்டுவது போதுமான அளவு ஊட்டசத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்காது என்றாலும், தாயிடம் போதுமான அளவு பால் உற்பத்தியாகாத சந்தர்ப்பங்களில் 
மில்க் பவுடர் எக்லெஸ் கேக் ரெசிபி !
அல்லது குழந்தை சரியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத சந்தர்ப்பங்களில் இது உதவியாக இருக்கும்.நமது தினசரி உணவுகளில் புரதச்சத்துக்கள் நிரம்பிய சில உணவுகளை அவசியம் எடுத்து கொள்ள வேண்டும். 

அதில் பால் எப்போதும் முதன்மையானது. ஆம், பாலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நியூட்ரிஷன்கள் உடலுக்கு பல்வேறு புரதசத்துக்களை தருகிறது. 

ஆனால் தற்போது வரும் பாக்கெட் பால் அந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டதா என்று கேட்டால், பாலை விட தண்ணீரின் அளவு தான் அதிகமாக இருக்கிறது.

ஆகவே, தினசரி புரோட்டின்கள் நிறைந்த பால் பவுடர் கொண்டு உங்கள் ஹெல்த்தை உறுதி செய்யுங்கள். இது நேரடியாக பசு, ஒட்டகம் போன்ற விலங்குகளில் இருந்து எடுத்து இயற்கையான முறையில் தயாரிக்கப் படுகிறது. 

சுவையிலும், சத்துக்களிலும் சற்றும் குறையாத இந்த ஆரோக்கியமான பால் பவுடர்கள் அமேசான் (milk powder amazon) பக்கத்தில் குறைந்த விலையில் கிடைக்கிறது.

என்னென்ன தேவை?
மைதா - 150 கிராம்,

பால் பவுடர் - 100 கிராம்,

வெண்ணெய் - 100 கிராம்,

சர்க்கரை - 75 கிராம்,

பால் - 100 மி.லி.,

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,

சோடா உப்பு - 1/2 டீஸ்பூன்,

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மில்க் பவுடர் எக்லெஸ் கேக்
வெண்ணெயையும், சர்க்கரையையும் எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் மைதா, பால் பவுடர், பேக்கிங் பவுடர், வெனிலா எசென்ஸ், சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.

பின் இதில் பால் ஊற்றி ஹான்ட் பீட்டர் கொண்டு கட்டியில்லாமல் நன்கு கலந்து, வெண்ணெய் தடவிய கேக் டின்னில் கொட்டி, 

200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 20-25 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்து, ஆறியதும் பரிமாறவும்.
மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரி செல்சியஸில் 20-25 நிமிடம் பொன்னிறமாக மாறும் வரை வேக வைக்கவும்.
Tags: