கேரட் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?





கேரட் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. 
கேரட் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?
வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். கேரட் சாறு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் அதிக உள்ளடக்கம் காரணமாக இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. 

தொடர்ந்து கேரட் ஜூஸ் குடிப்பதால் கல்லீரலை சுத்தப்படுத்தவும், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். 

வைட்டமின் ஏ சமம். வயது வந்தோருக்கான அமெரிக்க பரிந்துரைகளைப் பயன்படுத்தி சதவீதங்கள் தோராயமாக மதிப்பிடப் படுகின்றன. 
மூல கேரட்டில் 88% நீர், 9% கார்போ ஹைட்ரேட், 0.9% புரதம், 2.8% உணவு நார்ச்சத்து, 1% சாம்பல் மற்றும் 0.2% கொழுப்பு. 

சரி இனி கேரட் வேர்க்கடலை பயன்படுத்தி டேஸ்டியான கேரட் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள் :

துண்டுகளாக நறுக்கிய கேரட் - ஒரு கப்

வேர்க்கடலை - கால் கப்

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை
செய்முறை:
கேரட் வேர்க்கடலை சட்னி
வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். 

கால் டீஸ்பூன் எண்ணெயில் கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும். மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாவை போட்டு நன்றாக பொடித்த பின்னர் வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக பெருங்காயத்தூள் வதக்கிய கேரட், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் துவையலாக அரைத் தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி நன்றாக கலந்து பரிமாறவும்.இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
Tags: