பிரவுன் ரைஸ் புலாவ் செய்வது எப்படி?





பிரவுன் ரைஸ் புலாவ் செய்வது எப்படி?

என்னென்ன தேவை?
கேரட், பட்டாணி, பிரக்கோலி, குடைமிளகாய் – 1/4 கப்,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

பிரவுன் ரைஸ் – 1/2 கப்,

இஞ்சிபூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 1,

பட்டை – 1 (சிறிய துண்டு),

ஏலக்காய் – 1,

உப்பு – தேவையான அளவு,

கொத்தமல்லி – சிறிது.
எப்படிச் செய்வது?
பிரவுன் ரைஸ் புலாவ்
பிரவுன் ரைஸை 1 கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து, குக்கரில் 6-7 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது, ஏலக்காய், பட்டை, பச்சைமிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். 
நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் குழையாமல் வதக்கவும். வேக வைத்த அரிசியை சேர்த்து, உப்பு போட்டு மெதுவாக கலக்கவும். 

2-3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான பிரவுன் ரைஸ் புலாவ்  தயார்.
Tags: