டேஸ்டியான கராச்சி அல்வா செய்வது எப்படி?





டேஸ்டியான கராச்சி அல்வா செய்வது எப்படி?

மலேஷியாவில் பினாங்கிலும், நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது ஜாதிக்காய். உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் ஜாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம். 
டேஸ்டியான கராச்சி அல்வா செய்வது எப்படி?
இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தார்களாம். 

ஜாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும், இதன் உள்ளே இருக்கும் விதைதான் ஜாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதி தான் ஜாதிபத்திரி. 

இதில் விதையும் ஜாதிபத்திரி இதழும் தான் மணமும் மருத்துவக் குணமும் கொண்டவை. ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, 

அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். 

மேலும், வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து. 

இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்துதான் காரணம். 

தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள். 

தேவையானவை
மைதா, நெய் - தலா இரண்டு கப்

சர்க்கரை - 4 கப்

ஜாதிக்காய் பொடி - கால் டீஸ்பூன்

முந்திரி பருப்பு, பிஸ்தா - தலா ஒரு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை :
டேஸ்டியான கராச்சி அல்வா செய்வது எப்படி?
முதலில் சர்க்கரையை அடிகனமான கடாயில் கொட்டி, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

மைதாவை தண்ணீரில் கரைத்து சர்க்கரை பாகில் விட்டு, கட்டி தட்டாமல் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும்.
அதன் பின் பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், முந்திரி, பிஸ்தாவை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய் பொடியை போட்டு இறக்கவும். 

இதை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
Tags: