ஆட்டா காஷீரா செய்வது எப்படி?





ஆட்டா காஷீரா செய்வது எப்படி?

தேவையானவை:

கோதுமை மாவு – அரை கப்,

சர்க்கரை – அரை கப்,

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,

நெய் – கால் கப்,

முந்திரி, பாதாம் – தலா – 5.
செய்முறை:
ஆட்டா காஷீரா செய்வது
கடாயில் நெய் விட்டு, சூடானதும் கோதுமை மாவை வறுக்கவும். சர்க்கரை, தண்ணீர் தெளித்து கலக்கவும்.

சர்க்கரை கரைந்து இறுகிவரும் சமயம் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்துக் கலக்கவும். 
நன்கு கலந்து இறுகி வந்ததும் இறக்கினால்… ஆட்டா காஷீரா ரெடி. இதை விரும்பிய வடிவத்தில் செய்து கொள்ள லாம்.
Tags: