மூளை சுறுசுறுப்பாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !





மூளை சுறுசுறுப்பாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !

நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உணவு ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு சரியான உணவும், மன ஆரோக்கியம் மிகவும் அவசியம். 
மூளை சுறுசுறுப்பாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும். 
உங்கள் மூளைக்குத் மிகவும் தேவைப்படும் ஊக்கத்தை அளிக்க, நீங்கள் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? கீழே கொடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் போதும்.

அந்த உணவுகள் எவை என்று பார்ப்போம்:

ப்ரோக்கோலி:
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி என்பது முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ரோக்கோலி கருதப்படுகிறது. 
ப்ரோக்கோலியை சாப்பிட்டால் மூளையின் செல்கள் வளர்ச்சி அடையும். நினைவற்றால் அதிகரிக்கும், இது மூளையின் செயல்பாடுகளுக்கு நல்ல உணவாக கருதப்படுகிறது.

நட்ஸ்:
நட்ஸ்
நட்ஸ் ஒரு புரதம் சிறந்த ஆதாரமாக உள்ள "நல்ல கொழுப்பு உணவாகும். இதில் வைட்டமின் ஈ உள்ளது. நட்ஸ் வகையான பாதாம், முந்திரி, வேர்கடலை, அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ்களில் வைட்டமின் ஈ உள்ளன. 

எனவே தினமும் ஒரு சில நட்ஸ் சாப்பிட வேண்டும். இவை மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

முட்டை:
முட்டை
நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் முட்டையில் உள்ளது. தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். 
வளரும் குழந்தைகளுக்கு, மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும்.

மீன்:
மீன்
மூளை வளர்ச்சிக்கு மீன் முதன்மையாக உணவாக அறியப்படுகிறது அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. 

ஒமேகா-3 உள்ள வேதிப்பொருள் மூளையுடன் சம்பந்தப்பட்டது. எனவே நினைவுத் திறனில் பாதிப்பு வராமல் இருக்க மீன்கள் மிகவும் அவசியம்.

பெர்ரி பழங்கள்:
பெர்ரி பழங்கள்
விட்டமின்கள் நிறைந்திருக்கும் பெர்ரீஸ் பழங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல் மிக அதிகமாக அதிகரிக்கும். 

ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் வயதான செல்களில் ஏற்படும் 
ஒருவித ஸ்ட்ரெஸ்சை குறைப்பதிலும், மூளையின் சிக்னல் திறனை அதிகரிப்பதிலும் அரும்பங்கு ஆற்றுகிறது.
Tags: