ஸ்டஃப்டு கம்பு பரோட்டா செய்வது எப்படி?





ஸ்டஃப்டு கம்பு பரோட்டா செய்வது எப்படி?

கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 

ஸ்டஃப்டு கம்பு பரோட்டா செய்வது எப்படி?

எனவே, கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அவுல் என ஏதேனும்ஒரு வழி முறைகளில் சோளத்தை உங்கள் உணவில் சேரத்து கொள்வது அவசியம். கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. 

இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் எடையை  கட்டுக்குள் வைக்கும். 

தினசரி உணவில் அடிக்கடி கம்பு சேர்த்து கொள்வதால், நீரழிவு நோய்க்கு சிறப்பாக செயல்படுகிறது. கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ்  சர்க்கரைநோய்  ஏற்படாமல் காக்க உதவும்.

என்னென்ன தேவை?
மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 1/2 கப்,

கம்பு மாவு - 1 கப்,

உப்பு - தேவைக்கு.

ஸ்டஃப்பிங்க்கு...

துருவிய பனீர் - 1 கப்,

கேரட் - 1/4 கப்,

நறுக்கிய தக்காளி - 1,

உதிர்த்த இனிப்பு சோளம் - 1/8 கப்,

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

உப்பு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஸ்டஃப்டு கம்பு பரோட்டா செய்வது எப்படி?

பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது கம்பு மாவு, உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும். 

மாவு கை பொறுக்கும் சூட்டுக்கு வந்ததும், கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

பாத்திரத்தில் பனீர், கேரட், கொத்த மல்லித்தழை, தக்காளி, சோள முத்துக்கள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, இரண்டு உருண்டைகளை எடுத்து தனித்தனியாக 3 அங்குல அகலத்தில் சப்பாத்தியாக இடவும்.

ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள் ஸ்பூன் ஸ்டஃப்பிங்கை, சுற்றிலும் 1/4 அங்குல இடைவெளி விட்டு பரப்பி, மற்றொரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒன்றோடு ஒன்றை சேர்த்து ஒட்டி விடவும்.
நன்கு மூடியதும் மாவில் புரட்டி கையால் தட்டி மெதுவாக பெரிய கனமான சப்பாத்தியாக திரட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
Tags: